வவுனியாவில் பெண் தற்கொலை முயற்சி : அபாயநிலையில் தீவிர சிகிச்சை!!!

By Sindu

28 Feb, 2018 | 03:02 PM
image

வவுனியா - குருமன்காட்டு சந்திக்கு அருகேயுள்ள ரயில் கடவையில் இன்று  மதியம் 12.30 மணியளவில் பெண்ணொருவர் தற்கொலைக்கு முயன்று படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குருமன்காடு பகுதியில் அமைந்துள்ள சிங்கள பிரதேச சபைக்கு அருகேயுள்ள ரயில் கடவைக்கு அருகே யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் ரயில் கடவைக்கு அருகே நீண்ட நேரமாக நின்றுள்ளார். அப்போது அவ்விடத்தில் பணிபுரிந்த கடவைக்காப்பாளர் ஏன் இவ்விடத்தில் நின்கின்றீர்கள் என வினாவிய போது ஒருவருக்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் ரயில் சத்தம் கேட்டவுடன்  கடவைக்கு அருகே நடந்து சென்றுள்ளார். இதனை அவதானித்த கடவை காப்பாளர் ரயில் வருகின்றது, செல்ல வேண்டாமென தெரிவித்துள்ளார். எனினும் அவரின் பேச்சினை செவிமடுக்காது ரயில் கடவையில் தலையினை வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனை அவதானித்த ரயில் கட்டுப்பாட்டாளர் ரயிலினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்த போதும் குறித்த பெண் மீது ரயில் மோதிச் சென்று விட்டது என சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ள எரிவாயு சிலிண்டர்...

2022-12-08 15:31:51
news-image

முகக்கவசம் அணிந்து வெளியில் செல்லவும் -...

2022-12-08 15:20:04
news-image

கோட்டாபய சிங்கப்பூரில் தங்கியிருப்பதற்கு அனுமதியளித்த விவகாரம்...

2022-12-08 15:35:50
news-image

கிராஞ்சி கடலட்டை பண்ணைக்கு எதிராக போராடிய...

2022-12-08 15:21:32
news-image

பொலிஸாரை மிரட்டி, வீடியோ காட்சிகளை சமூக...

2022-12-08 14:51:03
news-image

மலையகத்தின் பல பிரதேசங்களிலும் வீசிய மினி...

2022-12-08 14:58:47
news-image

கணவர்களால் தாக்கப்பட்டு வைத்தியசாலைகளுக்கு வரும் பெரும்பாலான...

2022-12-08 14:26:11
news-image

தடைப்பட்டிருந்த மலையக ரயில் சேவைகள் வழமைக்கு...

2022-12-08 14:19:05
news-image

மூத்த ஊடகவியலாளர் கலாபூஷணம் எம்.எஸ்.குவால்தீன் காலமானார்

2022-12-08 14:38:40
news-image

வவுனியாவில் தனியார் கல்வி நிறுவனத்தின் முன்...

2022-12-08 14:29:48
news-image

கொழும்பில் தீ விபத்து

2022-12-08 13:48:01
news-image

நாமலுக்கு எதிரான வழக்கின் விசாரணைகள் ஒத்திவைப்பு

2022-12-08 13:37:40