நீரிழிவு முற்றிலும் குணமாகாது என்பதால் நீரிழிவு நோயாளிகள் மாத்திரை, ஊசியோடு வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.
மாதம் ஒருமுறை சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் இரத்தப் பரிசோதனை, 3 மாதங்களுக்கு ஒருமுறை இரத்தச் சர்க்கரை சராசரி அளவு சோதனை, 6 மாதங்களுக்கு ஒரு முறை ஈ.சி.ஜி. மற்றும் கண் பரிசோதனை போன்ற தேவையான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
சுய வைத்தியம் கூடாது. வைத்தியரின் ஆலோசனைக்குப் பின்னரே மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும்.
அதிகாலை நாலரை முதல் ஆறு மணிக்குள் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.
மாவுச்சத்தைத் தவிர்த்து நார்ச்சத்து உணவை அதிகரித்துக்கொள்ள வேண்டும்.
பழங்களில் மா, பலா, வாழையை தவிர்த்து கொய்யா, நாவல், பப்பாளி, அத்தி அதிகம் சேர்க்க வேண்டும்.
கீரைகளில் முருங்கை, அகத்தி, மணத்தக்காளி அதிகம் சேர்க்க வேண்டும். பாலக் கீரையைத் தவிர்ப்பது நல்லது.
சிறு தானியங்களைச் சிதைக்காமல் உண்ண வேண்டும். கூழ், களி தவிர்க்கவும்.
உணவுத் தட்டில் காய்கறிகளும் பழங்களும் அதிகமாகவும் சாதம் குறைவாகவும் இருப்பது மிக அவசியம்.
தினசரி 2 துண்டு பூண்டை, சாப்பாட்டுடன் சாப்பிட மாரடைப்பு மற்றும் கொழுப்பைத் தவிர்க்கலாம். கொடியில் வளரும் அனைத்துக் காய்கறிகளையும் சாப்பிடலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM