அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் லகிரு வீரசேகர மற்றும் டெம்பிடியே சுகதானந்த தேரர் ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

அண்மையில், இடம்பெற்ற ஆர்ப்பாட்ட நடவடிக்கை காரணமாக இவர்கள் கைதுசெய்யப்பட்டனர். 

பின்னர், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தேகநபர்கள் இன்று மீண்டும் கொழும்பு - கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். 

இதனையடுத்து இவர்களை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.