எதிர்க்­கட்சித் தலை­வரை பெற்றே தீருவோம் : கூட்டு எதி­ரணி அறி­விப்பு

Published By: Priyatharshan

28 Feb, 2018 | 10:41 AM
image

எதிர்க்­கட்சித் தலைவர் பத­வியை  பெற்­றுக்­கொள்­வ­தற்­காக  நாங்கள் தொடர்ந்து செயற்­ப­டுவோம். எமக்கு எதிர்க்­கட்சித் தலைவர் பத­வியைத் தராமல் சபா­நா­யகர் ஜன­நா­யக விரோ­த­மாக  செயற்­பட்­டுக்­கொண்டு வரு­கின்றார் என்று   கூட்டு எதிர்க்­கட்சித் தலை­வரும்    பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான   தினேஷ் குண­வர்த்­தன தெரி­வித்தார். 

அர­சாங்கம் மக்­களின்  ஆணையை  இழந்­துள்­ளது.  எனவே  உட­ன­டி­யாக   பாரா­ளு­மன்­றத்தைக் கலைத்து பொதுத்­தேர்­தலை நடத்தி புதிய ஆட்­சியை கொண்­டு­வர நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.   

கூட்டு எதிர்க்­கட்­சியின் அடுத்த கட்ட நட­வ­டிக்கை எவ்­வாறு அமையும் என்று விப­ரிக்­கை­யி­லேயே   தினேஷ் குண­வர்த்­தன  மேற்­கண்­ட­வாறு கூறினார். 

அவர்  இது­தொ­டர்பில் மேலும் விப­ரிக்­கையில்,

நாங்கள் அடுத்தகட்­ட­மாக  அர­சியல் ரீதியில் எவ்­வாறு செயற்­ப­டு­வது  என்­பது குறித்து  ஆராய்ந்து வரு­கின்றோம். குறிப்­பாக தேவை­யான நேரத்தில்  அவ­சி­ய­மான திட்­டங்­களை நாங்கள் முன்­னெ­டுப்போம். அதில் நாங்கள் உறு­தி­யாக இருக்­கின்றோம். மக்­களின் ஆணை  மஹிந்த தரப்­பிற்கே கிடைத்­தி­ருக்­கின்­றது. எனவே   தற்­போ­தைய அர­சாங்­கத்­தினால் தொடர்ந்து பய­ணிக்க முடி­யாது. 

அர­சாங்கம் உட­ன­டி­யாக பாரா­ளு­மன்­றத்தை கலைத்து பொதுத் தேர்­தலை நடத்தி  புதிய ஆட்­சியை நிறுவ நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும். இந்த அர­சாங்­கத்­திற்கு தொடர்ந்து பய­ணிக்க முடி­யாது.   அந்த  பய­ணத்தை மக்கள்    நிறுத்­தி­யி­ருக்­கின்­றனர். அதனைப் புரிந்­து­கொண்டு அர­சாங்கம்   பொதுத்­தேர்­தலை நடத்­த  நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும். 

இதே­வேளை பாரா­ளு­மன்­றத்தில்   எதிர்க்­கட்சித் தலைவர் பத­வியை கூட்டு எதி­ர­ணிக்கு வழங்க நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும். சபா­நா­யகர் இந்த விட­யத்தில்   ஜன­நா­யக ரீதியில் செயற்­ப­ட­வேண்டும்.  பாரா­ளு­மன்ற சம்­பி­ர­தா­யங்­களின்படி    எண்­க­ணிதம்   கவ­னத்தில் கொள்­ளப்­ப­ட­வேண்டும். எண்­க­ணிதம் என்­பது   இந்த   முழு உல­கத்­தி­னாலும் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட ஒரு விட­ய­மாகும்.  

எனவே  எண்­க­ணித ரீதி­யாக பார்க்கும் போது பாரா­ளு­மன்­றத்தில் கூட்டு எதி­ர­ணிக்கே   அதி­க­ளவு  எம்.பி.க்கள் இருக்­கின்­றனர். எனவே எதிர்க்­கட்சித் தலைவர் பதவி கூட்டு எதி­ர­ணிக்ேக வழங்­கப்­ப­ட­வேண்டும்.  

தற்­போது  எதிர்க்­கட்சித் தலைவர் பத­வியை வகிக்­கின்ற தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பை­விட மூன்று  மடங்­கிற்கும் அதி­க­மான  பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை  கூட்டு எதி­ரணி  வைத்­தி­ருக்­கின்­றது. எனவே இந்த விட­யத்தை கவ­னத்தில் கொண்டு சபாநாயகர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை  கூட்டு எதிரணிக்கு வழங்க  நடவடிக்கை எடுக்கவேண்டும். எவ்வாறிருப்பினும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற்றுக்கொள்வதற்காக கூட்டு எதிரணி தொடர்ந்து செயற்படும் என்பதை  உறுதியாக தெரிவிக்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31