இங்கிலாந்தில் வெற்றி பெற்ற குத்துச் சண்டை வீரர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சோகச் சம்பவத்தால் விளையாட்டு உலகம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.
இங்கிலாந்தில் டான்காஸ்டரில் கடந்த சனிக்கிழமை குத்துச்சண்டை போட்டியொன்று நடைபெற்றது. இதில் நியூகேஸ்டிலைச் சேர்ந்த ஸ்கொட் வெஸ்ட்கார்த், டெக் ஸ்பெல்மேனை எதிர்கொண்டார்.
இதில் 31 வயதான ஸ்கொட் வெஸ்ட்கார்த் வெற்றி பெற்றார். வெற்றிபெற்ற சந்தோஷத்தில் போட்டிக்குப்பின் நிருபர்களுக்கு அவர் பேட்டியளித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் ஸ்கொட் வெஸ்ட்கார்த் பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டதால் மரணம் ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. பேட்டியளித்துக் கொண்டிருக்கும்போது திடீரென சரிந்து உயிரிழந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM