பங்­க­ளாதேஷ் கிரிக்கெட் அணியின் இடைக்­கால தலைமை பயிற்­சி­யா­ள­ராக கொட்னி வோல்ஷ் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். 

அத்­துடன் இலங்­கையில் நடை­பெ­ற­வுள்ள முத்­த­ரப்பு தொட­ருக்­கான பங்­க­ளாதேஷ் அணியும் அறி­விக்கப்பட்­டுள்­ளது.

இலங்­கையில் எதிர்­வரும் மார்ச் மாதம் இலங்கை, இந்­தியா, பங்­க­ளாதேஷ் ஆகிய அணிகள் மோது­கின்ற முத்­த­ரப்பு இரு­ப­துக்கு 20 தொடர் நடை­பெ­ற­வுள்­ளது. 

காயத்­தி­லி­ருந்து மீண்டு வந்­துள்ள ஷகிப் அல் ஹசன் மீண்டும் தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். 

பங்­க­ளாதேஷ் அணியின் தலைமை பயிற்­சி­யா­ள­ராக இருந்த சந்­திக்க ஹத்து­ரு­சிங்க தனது பத­வியை இராஜி­னாமா செய்­து­விட்டு இலங்கை அணியின் பயிற்­சி­யா­ள­ராக செயற்­பட்டு வரு­கிறார்.

அவ­ருக்குப் பதி­லாக புதிய பயிற்­சி­யா­ளரை பங்­க­ளாதேஷ் கிரிக்கெட் சபை தேர்வு செய்­யாமல் இருந்­தது. 

இந்­நி­லையில் மேற்­கிந்­தியத் தீவுகள் அணியின் முன்னாள் வேகப்­பந்து வீச்­சாளர் கொட்னி வோல்ஷை இடைக்­கால தலைமை பயிற்­சி­யா­ள­ராக நியமித்துள்ளது.