புகழ்பெற்ற விஞ்ஞானியான அல்பர்ட் ஐன்ஸ்டின் 100 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடித்து தெரிவித்த புவி ஈர்ப்பு அலைகளை தற்கால விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தினர்.

கடந்த 1915ஆம் ஆண்டு விஞ்ஞானி ஐன்ஸ்டின் தனது கோட்பாடு ஒன்றில் இது குறித்த கணிப்பை முன்வைத்திருந்தார்.

விஞ்ஞானி ஐன்ஸ்டின் கண்டுபிடித்து வெளியிட்ட கோட்பாட்டை தற்போதைய விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தினர்.

 வான்வெளியில் 'பிளாக் ஹோல்' என்ற மர்மத்தை ஏற்கெனவே விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருந்தனர்.

தற்போது அதன் மூலம் புவி ஈர்ப்பு அலைகள் இருக்கிறதா? இல்லையா? என்பதை அறிய சர்வதேச விஞ்ஞானிகளுடன் இந்திய விஞ்ஞானிகளும் பணியாற்றி வந்தனர். 

கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர்  மாதம் 15ஆம் திகதி அமெரிக்காவில் லூசியானா மாகாணத்தில் உள்ள லிவிங்ஸ்டன் என்ற இடத்தில் 'லிகோ டிடேக்டர்ஸ்' என்ற கருவி மூலம் புவி ஈர்ப்பு அலைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. 

மேலும் இரு பிளாக் ஹோல்கள் மோதிக்கொள்ளும் போது மாற்றங்களையும் இந்த விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளது. அப்போது நிகழும் சப்தத்தை இந்த குழு பதிவு செய்துள்ளது.

புவிஈர்ப்பு அலைகளை கண்டுபிடிப்பதில் இந்திய விஞ்ஞானிகளும் தங்கள் பங்களிப்பை வழங்கியுள்ளனர். 

புனேவில் உள்ள சர்வதேச வானியற்பியல் மற்றும் வானவியல் பல்கலைக்கழகத்தில் இந்திய விஞ்ஞானிகள் இது குறித்த அறிவிப்பை முறைப்படி அறிவிக்கவுள்ளனர்.

இந்த விழாவில் கஸ்துரி ரங்கன் உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட மூத்த விஞ்ஞானிகள் பங்கேற்கின்றனர். இந்திய விஞ்ஞானிகள் ஆற்றிய இந்த சேவைக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

'பிளாக் ஹோல்' உள்ளதா? இல்லையா?என்ற கருத்து பல ஆண்டுகளாக நீடித்து வந்தது. புவி ஈர்ப்பு அலைகள் இருந்தால் 'பிளாக் ஹோல்' பற்றிய மர்மமும் விலகும் என்பது குறிப்பிடத்தக்கது.