தென்­னா­பி­ரிக்க அணியின் வேகப்­பந்து வீச்­சாளர் மோர்னே மோர்கல் சர்­வ­தேச போட்­டி­க­ளி­லி­ருந்து ஓய்வு பெறப் போவ­தாக அறி­வித்­துள்ளார். 

தென்­னா­பி­ரிக்க அணியின் முன்­னணி வேகப்­பந்து வீச்­சாளர் மோர்னே மோர்கல் கடந்த 2006ஆ-ம் ஆண்­டி­லி­ருந்து தென்­னா­பி­ரிக்க அணிக்­காக விளை­யாடி வரு­கிறார். இந்­தியத் தொடர் வரை 83 டெஸ்ட், 117 ஒருநாள் மற்றும் 44 இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் போட்­டி­களில் விளை­யா­டி­யுள்ளார்.

சுமார் 12 வரு­டங்­க­ளாக தென்­னா­பி­ரிக்க அணிக்­காக விளை­யாடி வந்த மோர்னே மோர்கல் எதிர்­வரும் மார்ச் மாதம் ஆரம்­ப­மா­க­வுள்ள அவு­ஸ்தி­ரே­லி­யா­வுக்கு எதி­ரான 4 போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொட­ருடன் சர்­வ­தேச போட்­டி­க­ளி­லி­ருந்து ஓய்வு பெறு­வ­தாக அறி­வித்­துள்ளார்.

வேகப்­பந்து வீச்­சுக்கு சாத­க­மான ஆடு­க­ளத்­திலும் பௌன்ஸ் ஆடு­க­ளத்­திலும் சிறப்­பான பந்துவீச்சை வெளிப்­ப­டுத்தி எதி­ரணி துடுப்­பாட்ட வீரர்­களை திண­ற­டிப்­பதில் மோர்னே மோர்கல் வல்­லவர். 

83 டெஸ்ட் போட்­டி­களில் 294 விக்­கெட்­டுக்­களும் ஒருநாள் போட்­டி­களில் 188 விக்­கெட்­டுக்­களும் இரு­ப­துக்கு 20 போட்­டி­களில் 47 விக்­கெட்­டுக்­களும் வீழ்த்­தி­யுள்ளார்.

ஓய்வு முடிவு குறித்து மோர்கல் கூறுகையில், இந்த முடி­வா­னது மிகவும் கடி­ன­மா­னது. என்­றாலும் புதிய வாழ்க்­கையை தொடங்க இதுதான் சரி­யான நேர­மாக கரு­து­கிறேன். குடும்பத்தின் நலன்தான் முக்கியம். அவர்கள் நலன் கருதியே இந்த முடிவை எடுத்துள்ளேன் என்றார்.