நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம்  மேற்கொண்டு அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட ஒருநாள் போட்டி தொடரை நியூசிலாந்து 2–1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இரு அணிகளும் 2 போட்டிக்கொண்ட டெஸ்ட் தொடரில் மோதுகின்றன. முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டன் நகரில் இன்று தொடங்கியது. 

நாணயசுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் நியூசிலாந்து வீரர்கள் ஆரம்பம் முதலே தடுமாறினர். 

ஹாசில்வுட், பீட்டர் சிடில் ஆகியோர் அபார பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்து  நியூசிலாந்து அணி 48 ஓவரில் 183 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக கிரெக் 41 ஓட்டங்கள் எடுத்தார். ஹாசில்வுட் 4 விக்கெட்டும், சிடில், லயன் தலா 3 விக்கெட்டும் கைப்பற்றினர். 

அவுஸ்திரேலியா முதல் இன்னிங்சை ஆரம்பிக்க தொடக்க வீரர்களான ஜோபர்னஸ் ஓட்டங்கள் எடுக்காமலும், டேவிட் வார்னர்  5 ஓட்டங்களுக்கும்  சவுத்தி பந்தில் ஆட்டம் இழந்தனர். அதன்பின் குவாஜா– ஸ்டீவன் ஸ்மித் ஜோடி நிதானமாக விளையாடி 126 ஓட்டங்களை தமக்கிடையில் பகிர்ந்த வேளையில் 71 ஓட்டங்களுடன் ஸ்மித் வெளியேறினார்.

முதல் நாள் முடிவில் 143 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களை மட்டும் இழந்து வலுவான நிலையில் உள்ளது.