இந்தியா - தமிழ்நாட்டின்,  ராஜபாளையத்தில் மனைவி வேலைக்கு சென்ற கோவத்தில் மனைவியை  கொலை செய்த கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ராஜபாளையத்தை சேர்ந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

மது பாணக்கடையில் வேலை செய்யும் கணவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் பிரச்சினை செய்துள்ளார். மேலும் மனைவியின் நடத்தையிலும் சந்தேகம் அடைந்துள்ளார்.

விரக்தியடைந்த மனைவி தனது 2 குழந்தைகளுடன் 6 மாதங்களுக்கு முன்பு தாய் வீட்டுக்கு சென்று, அங்கிருந்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு  தளவாய்புரத்தில் உள்ள தனியார் செல்போன் கடைக்கு வேலைக்கு சென்றுள்ளார்.

இதையறிந்த கணவர்  மகளை வேலைக்கு அனுமதிக்கக்கூடாது எனவும் மீறி சென்றால் கொலை செய்து விடுவேன் என்றும் மனைவியின் தாயாரிடம்  கூறியுள்ளார்.

இதனை பொருட்படுத்தாத மனைவி வேலைக்கு சென்று வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவர் மனைவியை கொலை செய்ய திட்டமிட்டு தனது நண்பர்களுடன்  மனைவி வேலை பார்க்கும் இடத்திற்கு சென்று தகராறு செய்துள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே ஆத்திரமடைந்த கணவர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மனைவியை சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த கோகுல லட்சுமி பரிதாபமாக இறந்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார்  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும்  சந்தேக நபர் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்த பொலிஸார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.