பங்களாதேஷ், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் பங்கேற்று விளையாடும் முத்தரப்பு கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாம் விபரம் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸின் பெயர் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட குழுவில் இடம்பெறவில்லை.

பங்களாதேஷில் இடம்பெற்ற முக்கோணத் தொடரின் போது அஞ்சலோ மெத்தியூஸ் உபாதைக்குள்ளானார்.

இந்நிலையில் அவர் குறித்த காயத்தில் இருந்து இதுவரை மீண்டு வரவில்லையென இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுதந்திரக் கிண்ணத் தொடருக்கு இலங்கை கிரிக்கெட் அணிக்கு டினேஷ் சந்திமால் தலைமை தாங்குகிறார்.

எதிர்வரும் மார்ச் மாதம் 6 ஆம் திகதி ஆரம்பமாகும் சுதந்திரக் கிண்ணத் தொடரில் விளையாடவுள்ள 15 பேர் கொண்ட இலங்கை குழாம் வருமாறு,

டினேஷ் சந்திமல் ( அணித் தலைவர் ), உபுல் தரங்க, தனுஷ்க குணதிலக, குஷல் மெண்டிஸ், தசுன் சானக்க, குஷல் ஜனித் பெரேரா, திஸர பெரேரா, ஜீவன் மெண்டிஸ், சுரங்க லக்மால், நிரோஷன் டிக்வெல்ல, சதீர சமரவிக்கிரம, இசுரு உதான, ஜெப்ரி வென்டர்ஸா, அகில தனஞ்சய, அமில அபென்சோ, அஸித பெர்னாண்டோ, லகிரு குமார, நுவான் பிரதீப், துஷ்மந்த சாமிர, தனஞ்சய டி சில்வா.