கூட்டு எதிர்க்கட்சி அரசாங்கத்திற்கு எச்சரிக்கை.!

Published By: Robert

27 Feb, 2018 | 04:14 PM
image

(எம்.சி.நஜிமுதீன்)

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை ஒப்படைக்குமாறு ஜனாதிபதி அல்லது வெளிவிவகார அமைச்சர் 24 மணி நேரத்திற்குள் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாக வேண்டுகோள் விடுக்க வேண்டும் என கூட்டு எதிர்ககட்சி அரசாங்கத்தைக் கோரியுள்ளது.

கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பொரளை என்.எம்.பெரேரா நிலையத்தில் நடைபெற்றது.  அவ்வெதிர்க்கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாரளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகப் பெரும அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார். 

மத்திய வங்கி பிணை முறிமோசடி இடம்பெற்று இன்று மூன்று வருடங்களாகின்றன. நாடு சுதந்திரமடைந்த பின்னர் அரசாங்க அனுசரனையில் இடம்பெற்ற பாரிய மோசடியாக அது உள்ளது. எனினும் குறித்த மோசடியின் பிரதான சூத்திரதாரியான மத்திய வங்கியின் முன்னாள் அளுநர் அர்ஜுன மகேந்திரனை கண்டுபிடிக்க முடியவில்லையென இரகசிய பொலிஸார் நீதிமன்றிற்குத் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. சிங்கப்பூரில் வசித்த வீட்டில் அவர் தற்போது இல்லை எனவும் இரகசியப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மகேந்திரனை கடந்த பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி  நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. குறித்த திகதியில் அவர் ஆஜராகாமையினால் மீண்டும் மார்ச் மாதம் எட்டாம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும் அவர் வீட்டில் இல்லாததனால் சித்தாரிசு வழங்குவதற்கும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இரகசியப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆகவே இராஜதந்திர ரீதியில் தீர்க்க வேண்டிய பிரச்சினையாக இது தற்போது உருவெடுத்துள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13