(நா. தனுஜா)

பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான டுபாய் மன்றத்திற்கு இலங்கையிலிருந்து விசேட நிபுணர் குழுவினர் விஜயம் செய்துள்ளர். சட்டரீதியற்ற முறையில் மனிதர்களை நாடு கடத்தல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தல் மற்றும் வன்முறை செயற்பாடுகளால் பாதிக்கப்பட்டோர் மீது அக்கறையுடன் செயற்படல் என்பன தொடர்பாக பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான டுபாய் மன்றத்தின் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடலை மேற்கொள்வதற்கு மேற்படி குழுவினர் உத்தேசித்துள்ளனர். 

சட்டரீதியற்ற முறையில் மனிதர்களை நாடு கடத்தல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தல் மற்றும் வன்முறை செயற்பாடுகளால் பாதிக்கப்பட்டோர் மீது அக்கறையுடன் செயற்படல் என்பன தொடர்பில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான டுபாய் மன்றம் கையாளும் நுட்பங்கள் தொடர்பில் பிரதானமாக ஆராயப்படவுள்ளது. அத்தோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு சமூக பொருளாதார சுகாதார கல்வி மற்றும் உளவள ஆலோசனை சேவை வழங்கல் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது. 

மேலும் இலங்கையிலிருந்து விஜயம் மேற்கொண்டுள்ள குழுவானது பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான டுபாய் மன்றத்தின் கடந்தகால செயற்பாடுகள் மற்றும் அடைவுகள் என்பனற்றில் கவனம் செலுத்தவுள்ளதோடு டுபாய் மன்றத்தினால் இதுவரை பொறுப்பேற்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்டோர் தொடர்பாகவும் ஆராயவுள்ளது.