மாதம்பே பிரதேசத்தில் ஒருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் அம்பலாங்கொடை பொலிஸினால்  நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர்  கடந்த ஜனவரி மாதம் 10 ஆம் திகதி அம்பலாங்கொடை – மாதம்பே பிரதேசத்தினை சேர்ந்த நபர் ஒருவர் சுட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட மய்க்ரோ வர்க்கத்தினை சேர்ந்த துப்பாக்கி ஒன்று, பொலிஸினால் கைப்பற்றப்பட்டுள்ளதோடு மேலதிக, விசாரணைகளை பொலிஸ் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த நபர் , இன்று பலபிடியை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.