நீண்ட கால இடைவெளியின் பின்னர்  வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் “கரிக்கோச்சி” புகையிரதம் நேற்று யாழ்ப்பாணம் சென்றுள்ளது.

நேற்று 26 ஆம் திகதி திங்கட்கிழமை 8 மணிக்கு மணியளவில் அநுராதபுரம் ரயில் நிலையத்திலிருந்து பயணத்தை “கரிக்கோச்சி” புகையிரதம் ஆரம்பித்திருந்தது.

இந்நிலையில் நேற்று பிற்பகல் 4 மணியளவில்  யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தை “கரிக்கோச்சி” புகையிரதம் சென்றடையும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும்  ஆணையிறவு ஊடாக புகையிரதம் சென்றுகொண்டிருந்தபோது இயந்திரக் கோளாறு காரணமாக நிண்டநேரம் நிறுத்தப்பட்டு பின்னர் அது துறைசார் அதிகாரிகளினால் சீர் செய்யப்பட்டு   யாழ்ப்பாணம் ரயில் நிலையத்திற்கு நேற்றிரவு  7 மணியளவில் சென்றடைந்தது.

காங்கேசன்துறை ரயில் நிலையத்திற்கு இன்று செல்லவிருந்த நிலையில், அங்கு பயணத்தை மேற்கொள்ள நிலையில் இன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் ரயில் நிலையத்திலிருந்து சுற்றுலாப்பயணிகளுடன் கல்கிசை நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளது.

வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் பயணிப்பதற்கு ரயிலில் நான்கு குளிரூட்டப்பட்ட சொகுசு ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதுடன் நீண்ட காலத்திற்கு பின்னர் யாழ்ப்பாணம் சென்ற “கரிக்கோச்சி” ரயிலினைப் பார்ப்பதற்கு சிறுவர்கள் பெரியவர்கள் என யாழ். ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு புகைப்படம் எடுத்து மகிழந்தமை குறிப்பிடத்தக்கது.