மாத்தளையிலிருந்து  கண்டி நோக்கி  பயணித்த  இலங்கை போக்குவருத்து  சபையின் கண்டி தெற்கு  டிப்போவுக்கு சொந்தமான  பஸ்  வண்டியொன்று வீதியில் திடீரென தீப்பற்றியதால் பஸ் வண்டி பலத்த  சேதத்திற்குள்ளானது.

மாத்தளையில் இருந்து அதிகாலை  4.30 மணிக்கு  கண்டியை நோக்கிப் பயணித்த மேற்படி பஸ் வண்டி  அலவத்துகொடை  பலகடுவ பிரதேசத்தில் வைத்து அதிகாலை 5 மணியளவில் தீப்பற்றியதாக அதன் சாரதி மற்றும் நடத்துனர்  பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர்.

பஸ் வண்டி  தீப்பற்றும் போது அதிலிருந்த பயணிகள் பாதுகாப்பான முறையில் பஸ்ஸில் இருந்து  வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக அலவத்துகொடை பொலிஸார் மேலதிக  விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர்.