வீட்டில் குறும்பு செய்து குழப்பம் விளை­விக்கும் சின்­னஞ்­ சி­றார்­களை  அமை­திப்­ப­டுத்தி ஓரி­டத்தில் அமர வைப்­ப­தற்கு   அவர்­க­ளுக்கு ஐபாட் கணினி விளை­யாட்­டு­களை விளை­யாட பெற்றோர்  அனு­ம­திக்கும் போக்கு  அதி­க­ரித்து வரு­கி­றது. அதே­ச­மயம் சில வீடு­களில்  உண்ண அடம்­பி­டிக்கும்  குழந்­தை­க­ளுக்கு  ஐபாட்டில் வேடிக்கை காட்­சி­களை  காண்­பித்து உண­வூட்டும் நடை­மு­றையும் காணப்­ப­டு­கி­றது.

இந்­நி­லையில் இவ்­வாறு ஐபாட் உப­க­ர­ணத்­துக்கு பழக்­கப்­படும் சிறு­வர்­க­ளுக்கு  கைவிரல் தசை­க­ளி­லா­ன விருத்தி பாதிக்­கப்­பட்டு எதிர்­கா­லத்தில்  பென்­சில்­களைக் கூட  ஒழுங்­காக பிடிக்க முடி­யாத நிலைக்கு அவர்கள் தள்­ளப்­ப­டு­வ­தாக பிரித்­தா­னிய குழந்தை நல மருத்­துவ ஆய்­வா­ளர்கள் எச்­ச­ரித்­துள்­ளனர்.

விரல்­க­ளி­லுள்ள தசை­களின் விருத்­திக்கு உதவும்  பாரம்­ப­ரிய ரீதி­யான விளை­யாட்டுப் பொருட்­க­ளுக்கு பதி­லாக  தொடு­கை­யு­ணர்­வு­டைய கைய­டக்கத் தொலை­பேசி திரைகள் மற்றும்  ஐபாட்­டுகள் என்­ப­வற்றை  அள­வுக்­க­தி­க­மாக உப­யோ­கிக்கும் சின்னஞ் சிறார்கள்  எதிர்­கா­லத்தில் பென்­சிலைக் கூட சரி­யாகப் பிடிக்க முடி­யாத நிலைக்குத் தள்­ளப்­ப­டு­வ­தாக   மேற்­படி ஆய்­விற்கு தலைமை தாங்­கிய இங்­கி­லாந்து  தேசிய மருத்­து­வ­மனை  நம்­பிக்கை மன்­றத்தின் தலைவர்  சால்லி பேய்ன் தெரி­வித்தார்.

10  வரு­டங்­க­ளுக்கு முன்னர் சிறு­வர்­க­ளாக இருந்­த­வர்­களின்  விரல்­க­ளுக்கு இருந்த  பலம்  தற்­போ­துள்ள சிறு­வர்­களில் பல­ருக்கு இல்­லா­துள்­ள­தாக  தெரி­வித்த அவர், இன்றைய கால சிறு­வர்கள்  தமது ஆரம்பக் கல்வி உள்­ள­டங்­க­லாக அனைத்துக் கற்றல் தேவைப்­பா­டு­க­ளுக்கும் தொடு­கை­யு­ணர்­வுள்ள  ஐபாட்­க­ளையும் டப்லட் கணி­னி­க­ளையும்   பயன்­ப­டுத்தும் நிலைமை காணப்­ப­டு­வது கவலை தரு­வ­தா­க­வுள்­ள­தாக கூறினார்.