முழு ஆட்சி மாற்­றத்­தையே நாட்டு மக்கள் எதிர்­பார்த்­தனர். மக்­களை ஏமாற்றி போலி கபட நாடகமாடும் அமைச்­ச­ர­வையின் மாற்­றத்தையல்ல. பொது­மக்­களை நகைப்­புக்­குள்­ளாக்கும் நிர்­வா­கத்­தினை தேசிய அர­சாங்கம் மேற்­கொள்­வது ஜன­நா­யக கொள்­கை­க­ளுக்கு எதி­ரா­னது என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டலஸ் அழ­கப்­பெ­ரும தெரி­வித்தார்.

Image result for டலஸ் அழ­கப்­பெ­ரும

மக்கள் எதிர்­பார்த்த மாற்­றத்­தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு பதி­லாக ஆளும் தரப்­பி­ன­ரது விருப்­பங்­களை நிறை­வேற்றும் முக­மா­கவே புதிய அமைச்­சுக்­களின் மாற்றங்கள் இடம்பெற்­றுள்­ளன. குறித்த விட­யத்தின் கார­ண­மாக எதிர்­வரும் 18 மாத காலத்­தினுள் எவ்­வித மாற்­றமும் நாட்­டிலும் நிர்­வா­கத்­திலும் ஏற்­ப­ட­மாட்­டாது  என்றும் அவர் குறிப்­பிட்டார்.  

நல்­லாட்சி அர­சாங்­கத்தின் திடீர் அமைச்­சுக்­களின் மாற்றம் தொடர்பில் தெளி­வுப­டுத்­து­கை­யி­லேயே   அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில் ;

மக்­களின் விருப்­பத்­திற்கெதி­ராக நாட்டின் நிர்­வா­கத்­தினை மேற்­கொள்­ள­மு­டி­யாது என்ற யதார்த்த விட­யத்­தை அர­சாங்கம் புரிந்து  கொள்ள மறுக்­கின்­றது . தொடர்ந்தும் மக்­களின் வெறுப்­புக்­களை மாத்­திரம் உரு­வாக்கிக் கொண்டு வரு­கின்­றது. நாட்டு மக்கள் முழு ஆட்சி மாற்­றத்­தை மாத்­தி­ரம் எதிர்­பார்த்­த­னரே தவிர மக்­களை ஏமாற்றும் பிர­தி­ய­மைச்­சுக்­களின் மாற்­றத்­தையல்ல. தமது அமைச்­சுக்­களில் ஊழல் மற்றும் முறை­யற்ற நிர்­வா­கத்­தினை மேற்­கொண்­ட­வர்­களை பிறி­தொரு அமைச்­சுக்கு மாற்­று­வதால் எவ்­வித மாற்­றமும் ஏற்­ப­ட­ப்போ­வது கிடை­யாது. மாறாக ஊழல், மோச­டிகள அதி­க­ரிக்கும். நாட்டில் நீதித் துறை மாத்­தி­ரமே இது­வரை காலமும் சுயா­தீ­ன­மாக காணப்­பட்­டது. ஆனால் எதிர்­கா­லத்தில் நீதி­த்து­றையின் மீதும் மக்­களின் மதி ப்பு குறைய நேரிடும்.

ஸ்திர­மற்ற நிர்­வா­கத்­தினை மேற்­கொள் ளும் பிர­த­மரை பத­வியிலிருந்து நீக்கும் விட­யத்தை ஜனா­தி­பதி மேற்­கொள்­ளாமல் சட்டம் ஒழுங்கு அமைச்சு பத­வியை வழங்­கி­யுள்­ளமை வேடிக்­கை­யாக காணப்­ப­டு­கின்றது. ஜனா­தி­பதி ஐக்­கிய தேசிய கட்­சியை தொடர்ந்தும் பாது­காப்­பதை பல அர­சியல் விவ­கா­ரங்­களில் பகி­ரங்­க­மாக நிரூ­பித்து வரு­கின்றார்.

சட்டம் ஒழுங்கு அமைச்சு பத­வியை திடீ­ரென மாற்­று­வ­தற்கு எவ்­வித அழுத்­தங்­களும் சட்­டத்­து­றையின் மீது ஏற்­ப­ட­வில்லை. நாட்டு மக்கள் அனை­வரும் சட்­டத்­து­றை­யினை மதித்தே வந்­தனர். பிர­த­ம­ருக்கு குறித்த பத­வியை வழங்­கி­யமை  எதிர்­கா­லத்தில் பாரிய அர­சியல் சூழ்ச்­சிக்­கான ஆரம்­ப­கட்­ட­மா­கவே காணப்­ப­டு­கின்­றது.

2015ஆம் ஆண்டு மத்­திய வங்­கியில் இடம்பெற்ற பிணை­முறி விவ­கா­ரத்தின் முக்­கிய குற்­ற­வாளி பிர­தமர் என்ற விட­யத்­ தை நாட்டு மக்கள் நன்கறிவர். நாட்டு மக்­க­ளுக்கு தெரிந்த விடயம் நாட்டின் தலை­வ­ருக்கு தெரி­ய­வில்­லையா? பிணை­முறி விவ­காரம் தொடர்பில் பய­னற்ற பேச்­சு­வார்த் ­தை­களே இது­வ­ரை­கா­லமும் இடம் பெற்று வருகின்றன.

ஜனா­தி­பதி மக்­களின் தீர்­மா­னத்தை மதித்து செயற்­பட வேண்டும். மக்­களை ஏமாற்றும் நிர்­வா­கத்­தினை மேற்­கொள்­வதால் எவ்­வித பாரிய மாற்­றமும் ஏற்­ப­ட­மாட்­டாது. பாராளுமன்ற தேர்தலில் முழு நாட்டு மக்களும் தமது வெறுப்புக்களையும் ஒட்டுமொத்தமாக பிரயோகிப்பர். அதனால் உள்ளூராட்சி மன்ற தேர்தலை போன்று காலதாமதப்படுத்தாமல் பாராளுமன்ற தேர்தலை விரைவாக நடத்த நடவடிக்கை களை மேற்கொள்வதை விடுத்து, மக்களை

ஏமாற்றும் போலி நாடகங்களை அரங்கேற்று வதால் பயனில்லை என தெரிவித்தார்.