வவுனியா - நொச்சிமோட்டை பாலத்தினூடான போக்குவரத்தில் தடை ஏற்பட்டுள்ளது நீண்டகாலமாக இப்பாலத்தினை புனரமைத்துத்தருமாறு கோரிய போதிலும் இன்று வரையில் அப்பாலமூடான போக்குவரத்து மேற்கொள்வதில் பல அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளதுடன் அப்பாலத்தில் விபத்துகள் ஏற்படக்கூடய அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இப்பாலம் கடந்த சில தினங்காக உடைந்த நிலையில் காணப்படுவதுடன் ஒரு பக்கம் ஊடாகவே வாகனங்கள் தமது பயனத்தினை மேற்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பாலத்தில் போடப்பட்டுள்ள தகரங்களில்  சில உடைந்த நிலையில் காணப்படுகின்றது. பார ஊர்த்திகள்  பயனம் மேற்கொள்ளும் இப்பாலத்தில் போக்குவரத்து பொலிஸாரும் கடமையில் இல்லை. எனவே சாரதிகள் இப்பாலத்தில் அபயாகரமான போக்குவரத்தினையே மேற்கொண்டு வருகின்றதாகவும் தெரிவித்துள்ளனர்.

இப்பாலத்தினை சீரமைப்பது குறித்து எவ்விதமான நடவடிக்கையும் கடந்த சில தினங்காக இடம்பெறவில்லை இதையடுத்து வவுனியா மாவட்டத்திலுள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளரிடம் தொடர்புகொண்டு வினவியபோது,

இது தொடர்பாக தங்களது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், இன்னும் சில தினங்களில் இப்பாலம் சீரமைப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும், பாலத்தில் போடப்பட்டுள்ள தகரம் இன்னும் வந்து சேரவில்லை வந்ததும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.