மனதை வாசிக்கும்  செயற்கை மதி­நுட்ப தொழில்­நுட்­பத்தைப் பயன்­ப­டுத்தி இறந்த அன்­புக்­கு­ரி­ய­வர்­களை அச்சு அச­லாக பிர­தி­ப­லிக்கும் வகை­யி­லான  நடத்­தையைக் கொண்ட ரோபோக்­களை உரு­வாக்க முடியும் என  சுவீடன் விஞ்­ஞா­னிகள்  தெரி­விக்­கின்­றனர்.

இந்­நி­லையில் அவர்கள் இறந்த உற­வி­னர்­களை மேற்­படி ரோபோ உரு­வாக்­கத்­திற்­கான ஆய்­வுக்கு தாமாக முன்­வந்து உட்­ப­டுத்த விரும்­பு­ப­வர்­களைத் தேடி வரு­வ­தாக  கூறப்­ப­டு­கி­றது.

இந்த ரோபோக்கள் இறந்த உற­வி­னர்­க­ளது   குரலில் அவர்­களைப் போன்று  உரை­யாடும் வல்­ல­மையைக் கொண்­டுள்­ளதால்  அவை இறந்த அன்­புக்­கு­ரி­ய­வர்கள் இல்­லாத குறையை  பயன்­பாட்­டா­ளர்­க­ளுக்கு நிவர்த்தி செய்யும்  என  மேற்­படி ஆய்வில் பங்­கேற்­றுள்ள கலா­நிதி மிசியோ ககு கூறினார்.

மனதை  வாசிக்கும் ஆற்­றலைக் கொண்ட ரோபோ இயந்­தி­ரங்­களில்  எமது அல்­லது எமது அன்­புக்­கு­ரி­ய­வர்­களின்   மனதின் மாதி­ரியை பதி­வேற்றம் செய்­வதன் மூலம் நாம் அல்­லது  எமது அன்­புக்­கு­ரி­யர்கள் இறக்கும் போது   எம்மை அல்­லது அவர்­களைப்  போன்று அச்சு அச­லான குர­லிலும்  மனோ­பா­வத்­து­டனும் உணர்ச்­சி­க­ளு­டனும்  உரை­யா­டக்­கூ­டிய ரோபோக்­களை எதிர்­கா­லத்தில் உரு­வாக்­கு­வது சாத்­தி­ய­மாகும் என்று  அவர் கூறினார்.

இந்த ரோபோக்கள் எதிர்­வரும் 10  அல்­லது 20  ஆண்டுகளல் பயன்­பாட்­டுக்கு வரும் என ஆய்­வா­ளர்கள் நம்­பு­கின்­றனர்.