ரோயல் மற்றும் தோமியன் அணிகளுக்கிடையிலான 139ஆவது கிரிக்கெட் சமர் எதிர்வரும் மார்ச் மாதம் 8 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை கொழும்பு எஸ்.எஸ்.சி. சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
கொழும்பு ரோயல் கல்லூரி மற்றும் கல்கிஸை புனித தோமியன் கல்லூரி அணிகள் மோதும் ''நீலங்களின் சமர்'' என்று வர்ணிக்கப்படும் கிரிக்கெட் தொடரானது இலங்கையின் மிக நீண்ட வரலாற்றைக் கொண்ட ஒரு தொடராகும்.
ரோயல் மற்றும் தோமியன் கல்லூரிகள் பங்கேற்கும் '' நீலங்களின் சமர்'' (Battle of the Blues) என்று அழைக்கப்படும் வருடாந்த கிரிக்கெட் போட்டி 139ஆவது ஆண்டாக இம்முறை இடம்பெறுகின்றது.
இது உலகில் இடம்பெறும் இரண்டாவது பழமையான கிரிக்கெட் தொடர் என்பதே இதன் விசேட அம்சமாகும்.
இம்முறை நடைபெறவுள்ள நீலங்களின் சமருக்கும் டயலொக் நிறுவனம் பிரதான அனுசரணையை வழங்குகின்றது.
மிக நீண்ட வரலாற்றை கொண்ட ரோயல் மற்றும் தோமியன் சமர் 1879ஆம் ஆண்டு ஆரம்பித்த அதேநேரம் தொடர்ச்சியாக வருடம் தோறும் நடைபெற்று வரும் உலகிலுள்ள இரண்டாம் போட்டியாகும். முதலாவதாக இந்த போட்டிகளுக்கு ஒரு வருடத்துக்கு முன்னதாக ஆரம்பிக்கப்பட்ட அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரிலுள்ள புனித பேதுரு கல்லூரி மற்றும் பிரின்ஸ் அல்பர்ட் கல்லூரிக்குமிடையே நடைபெற்றுவரும் போட்டியாக இருக்கிறது.
பழம்பெரும் போட்டியாக நடைபெற்றுவரும் இந்த நீலங்களின் சமரில் 139ஆவது போட்டித் தொடரை வெல்லப் போவது ரோயல் கல்லூரி அணியா அல்லது தோமியன் கல்லூரி அணியா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM