இலங்கை, பங்களாதேஷ் அணிகளுடனான முத்தரப்பு இருபதுக்கு 20 தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் 70-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதும் முத்தரப்பு இருபதுக்கு 20 சுதந்திரக் கிண்ண கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது.
கொழும்பு ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் அரங்கில் எதிர்வரும் மார்ச் மாதம் 6ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை இத்தொடர் நடைபெறவுள்ளது.
இதன்போது ஒவ்வொரு அணியும் எதிரணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். முடிவில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும். இத் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியின் இந்நாள் தலைவர் விராட் கோஹ்லி மற்றும் முன்னாள் தலைவர் டோனி ஆகியோருக்கு இத் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
ரோஹித் ஷர்மா தலைவராகவும் ஷிகர் தவான் துணைத் தலைவராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் மற்றும் வோஷிங்டன் சுந்தர் ஆகியோர் 15 பேர் கொண்ட அணியில் இடம்பெற்றுள்ளனர்.
தென்னாபிரிக்க அணிக்கெதிரான கடைசி இருபதுக்கு 20 போட்டியில் விராட் கோஹ்லிக்கு ஓய்வு அளிக்கப்பட ரோஹித் ஷர்மா இந்திய அணிக்கு தலைவராக செயற்பட்டார்.
அணி விவரம்: ரோஹித் ஷர்மா (தலைவர்), ஷிகர் தவான் (துணைத் தலைவர்), கே.எல்.ராகுல், சுரேஷ் ரெய்னா, மணீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக் (விக்கெட் காப்பாளர்), தீபக் ஹூடா, வோஷிங்டன் சுந்தர், சாஹல், அக்ஷர் படேல், விஜய் சங்கர், ஷ்ரதுல் தாக்குர், ஜெயதேவ் உனத்கட், முஹமது சிராஜ், ரிஷாப் பாண்ட் (விக்கெட் காப்பாளர்).
இதேவேளை தென்னாபிரிக்க அணிக்ெகதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரின் இறுதிப் போட்டியில் 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 2–1 எனக் கைப்பற்றியது.
சமீபத்தில் நிறைவடைந்த ஒருநாள் தொடரை இந்திய அணி 5–1 எனக் கைப்பற்றியது. இதன்மூலம் தென்னாபிரிக்க மண்ணில் ஒருநாள், ‘இருபதுக்கு–20’ என இரண்டு கிண்ணங்களையும் வென்று அசத்தியது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM