பொல்கஹவெல, பட்டேகும்புர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ள நிலையில் துப்பாக்கிப் பிரயோகத்தில் 30 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர், பொல்கஹவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து அங்கு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டினுள் இருந்த குறித்த நபர் மீது இனந்தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட நிலையில் அங்கிருந்து அவர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டவர் சம்பவத்தில் உயிரிழந்த நபரின் மனைவியின் முதலாவது கணவரென  அடையாயம் கண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரேத பரிசோதனை இன்று நடைபெறவுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் பொல்கஹவெல பொலிஸால் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.