இம்ரான்கானின் இரண்டாவது மனைவி கொலை மிரட்டலுக்கு அஞ்சி  பாகிஸ்தானை விட்டு தனது உதவியாளருடன் வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இம்ரான்கான் முதலில் இங்கிலாந்து நாட்டின் ஜெமிமா கோல்டுஸ்மித்தை 1995 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். 2 குழந்தைகள் பிறந்த நிலையில் அவரை 2004ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்.

அதைத்தொடர்ந்து பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ரேஹம்கானை 2015ஆம் ஆண்டு இம்ரான்கான் மறுமணம் செய்தார். ஆனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதே ஆண்டில் அவரை விவாகரத்து செய்தார்.

சமீபத்தில் தனது ஆன்மிக வழிகாட்டியான பஸ்ரா பிபி என்பவரை 3ஆவது திருமணம் செய்துகொண்டார்.

இந் நிலையில் இம்ரான்கானின் 2ஆவது மனைவி ரேஹம்கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அவரை மர்ம நபர்கள் தொலைபேசியில் அழைத்து ‘‘இம்ரான்கானுக்கு எதிராக பேசினால் குண்டுவைத்து கொல்லப்படுவீர்கள்’’ என மிரட்டி உள்ளதாக தகவல் வெளியாகின

இம்ரான்கான் 3ஆவது திருமணம் செய்துகொண்டு உள்ள பஸ்ரா பிபியுடன் தனது திருமணத்தின்போதே தொடர்பில் இருந்ததாக ரேஹம்கான் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.