ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 37 ஆவது கூட்­டத்­தொடர் இன்று  திங்­கட்­கி­ழமை ஜெனி­வாவில் ஆரம்­ப­மா­க­வுள்ள நிலையில் இலங்கை விவ­காரம்  தொடர்பில் ஐ.நா.மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசென்  கடும் அழுத்­தங்­களை  பிர­யோ­கிப்பார் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. 

மனித உரிமை பேர­வையின்  தலைவர் தலை­மையில் நடை­பெறும் இந்த   37 ஆவது கூட்டத் தொடரில்   நிலையில்   இலங்கை மனித  உரிமை நிலை­வரம் உள்­ளிட்ட  பல்­வேறு நாடு­களின்   மனித உரிமை விவ­கா­ரங்கள் குறித்து ஆரா­யப்­ப­ட­வுள்­ள­துடன்   பிரே­ர­ணை­களும் முன்­வைக்­கப்­ப­ட­வுள்­ளன. 

இதே­வேளை  37 ஆவது கூட்டத் தொடர் இலங்­கைக்கு  மிக முக்­கி­யத்­து­வ­மிக்­க­தாக காணப்­ப­டு­கின்­றது.   கடந்த  2015 ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்டு  மீண்டும்  2017 ஆம் ஆண்டு இரண்டு வருட கால நீடிப்­புக்கு உட்­பட்ட  இலங்கை குறித்த பிரே­ரணை எவ்­வாறு    இலங்கை அர­சாங்­கத்­தினால்  அமுல்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது என்­பது குறித்து இந்தக் கூட்டத்  தொடரில் ஆரா­யப்­ப­ட­வுள்­ளது. 

விசே­ட­மாக எதிர்­வரும் மார்ச் மாதம்  16 ஆம் திகதி இலங்கை குறித்த புகோள காலக்­கி­ரம மீளாய்வு விவாதம் நடை­பெ­ற­வுள்ள நிலையில்  எதிர்­வரும் 21 ஆம் திகதி இலங்கை குறித்த  பிர­தான விவாதம் இடம்­பெ­ற­வுள்­ளது.   

 இதே­வேளை இலங்கை ஜெனிவா பிரே­ர­ணையை எவ்­வாறு அமுல்­ப­டுத்­து­கின்­றது என்­பது குறித்த மனித உரிமை ஆணை­யா­ளரின் அறிக்கை வெ ளியா­கி­யுள்­ளது.  இதில் பல்­வேறு விட­யங்­களை அவர் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.  குறிப்­பாக இலங்கை விவ­கா­ரத்தில்  சர்­வ­தேச நியா­யா­திக்­கத்தை  பயன்­ப­டுத்த முடி­யுமா என்­பது குறித்து ஆரா­யு­மாறு ஐக்­கிய நாடுகள்  மனித உரிமை பேர­வையின் உறுப்பு நாடு­க­ளிடம் செய்ட் அல் ஹுசென்  அந்த அறிக்­கையில் கூறி­யுள்ளார்.  

இன்று  நடை­பெ­ற­வுள்ள முத­லா­வது அமர்வில்   ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ுஹசைன்   ஐக்­கிய நாடுகள் செய­லாளர் நாயகம்  அன்­டோ­னியோ கட்ரஸ் உள்­ளிட்ட தரப்­பினர்  உரை­யாற்­ற­வுள்­ளனர்.  

முத­லா­வது அமர்வில் உரை­யாற்­ற­வுள்ள   ஐ.நா. மனித உரிமை  ஆணை­யாளர் செயிட் அல் ுஹசைன் இலங்கை தொடர்­பான தனது  நிலைப்­பாட்டை அறி­விக்­க­வுள்ளார்.  இதன்­போது  தனது அறிக்­கையில் உள்ள விட­யங்­களை குறிப்­பிட்டுக் கூறுவார் என்றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.  

இதே­வேளை இம்­முறை  கூட்டத் தொடரில்  பாதிக்­கப்­பட்ட மக்­களின் சார்பில்  மக்கள் பிர­தி­நி­திகள்  கலந்­து­கொண்டு  உரை­யாற்­ற­வுள்­ளனர்.  குறிப்­பாக  தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு  தமிழ்­தே­சிய மக்கள் முன்­னணி, மற்றும்  பல்­வேறு அர­சியல் கட்­சி­களின் மக்கள் பிர­தி­நி­திகள்  ஜெனி­வாவில் முகா­மிட்டு  பாதிக்­கப்­பட்ட மக்­களின் நிலைமை தொடர்பில்  உரை­யாற்­ற­வுள்­ளனர்.

விசே­ட­மாக ஜெனிவா வளா­கத்தில் நடை­பெ­ற­வுள்ள   20க்கும் மேற்­பட்ட  விசேட உபக்­கு­ழுக்­கூட்­டங்­களில் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­களின் பிர­தி­நி­திகள் கலந்­து­கொண்டு உரை­யாற்­ற­வுள்­ளனர். 

அது­மட்­டு­மன்றி  தென்­னி­லங்­கையின் சிவில் சமூக   பிர­தி­நி­தி­களும்  இம்­முறை கூட்டத் தொடரில் கலந்­து­கொண்டு   ஜெனிவா பிரே­ர­ணையை அமுல்­ப­டுத்­து­வ­தற்கு இலங்­கைக்கு கால அவ­காசம் வழங்­கப்­ப­ட­வேண்டும் என்­பது தொடர்பில்  சர்­வ­தேச சமூ­கத்தை வலி­யு­றுத்­த­வுள்­ளனர். 

அதே­போன்று தென்­னி­லங்­கை­யி­லி­ருந்து  இரா­ணு­வத்தை பாது­காக்க வேண்டும் என்ற கோரிக்­கையை முன்­வைத்து அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களின் பிர­தி­நி­திகள்   ஜெனி­வாவில் முகா­மிட்டு   விளக்­கங்­களை அளிக்­க­வுள்­ளனர். 

மேலும் சர்­வ­தேச அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள் மற்றும்  ஐ.நா. மனித உரிமை பேர­வையின் உறுப்பு நாடுகள் இலங்கை தொடர்­பாக ஜெனிவா வளா­கத்தில் இம்­மு­றையும் பல்­வேறு  உபக்­கு­ழுக்­கூட்­டங்­களை நடத்­த­வுள்­ளன.

இந்த உபக்­கு­ழுக்­கூட்­டங்­களில் இலங்கை அர­சாங்­கத்தின் பிர­தி­நி­திகள்  பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிர­தி­நி­திகள்,  சர்­வ­தேச சமூ­கத்தின் பிர­தி­நி­திகள் மற்றும்  புலம்­பெ­யர்ந்த அமைப்­புக்­களின் முக்­கி­யஸ்­தர்­களும்  கலந்து கொண்டு   உரை­யாற்­ற­வுள்­ளனர்.  இதற்­கான ஏற்­பா­டுகள்  சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புக்­க­ளினால்  முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. 

இம்­முறை பொது­ந­ல­வாய நாடு­களின் செய­லகம்  சர்­வ­தேச பாரா­ளு­மன்ற ஒன்­றியம் உள்­ளிட்ட அமைப்­புக்­களின் பிர­தி­நி­தி­களும்  முதலாம் கட்ட அமர்வில்  உரை­யாற்­ற­வுள்­ளனர்.  அதே­போன்று அமெ­ரிக்கா, கனடா, பிரிட்டன் அவுஸ்­தி­ரே­லியா, டென்மார்க்  உள்­ளிட்ட பல்­வேறு நாடு­களின்  வௌிவி­வ­கார அமைச்­சர்­களும் 37ஆவது கூட்டத் தொடரின்  முதலாம் கட்ட அமர்வில்  கலந்து கொண்டு உரை­யாற்­ற­வுள்­ளனர். 

இது இவ்­வாறு இருக்க  வௌிவி­வ­கார அமைச்சர்  தலை­மையில் அமைச்சின் உயர் அதி­கா­ரி­களும்  சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தின் உயர் அதி­கா­ரி­களும் ஜெனிவா நோக்கி செல்­ல­வுள்­ளனர்.   அதா­வது எதிர்­வரும் 21 ஆம் திகதி  நடை­பெறும்  விவா­தத்­தின்­போது இலங்­கையின் சார்பில்  வெ ளிவி­வ­கார அமைச்சர்   பங்­கேற்று  உரை­யாற்­ற­வுள்ளார். 

வௌிவி­வ­கார அமைச்சின் உரையில்  ஜெனிவா பிரே­ர­ணையை இலங்கை எவ்­வாறு அமுல்­ப­டுத்­து­கின்­றது. மற்றும் அதில் காணப்­ப­டு­கின்ற சவால்கள் என்­பன குறித்­து­வி­ளக்­க­ம­ளிக்­கப்­ப­ட­வுள்­ளது. 

அதே­போன்று   காணாமல் போனோர் விவ­கா­ரத்­திற்கு தீர்­வு­காண காணா­மல்­போனோர் குறித்த அலு­வ­லகம் அமைக்­கப்­பட்­டுள்­ளமை தொடர்­பிலும்  இலங்கை அர­சாங்­கத்தின் சார்பில் விளக்­க­ம­ளிக்­கப்­படும்.  நம்­ப­க­ர­மான பொறி­மு­றையை முன்­னெ­டுத்து பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி நிலை­நாட்­டப்­படும் என அர­சாங்­கத்தின்  சார்பில் தெரி­விக்­கப்­ப­டு­மென  கூறப்­ப­டு­கின்­றது. 

37 ஆவது கூட்டத் தொடர் எதிர்­வரும்  பெப்­ர­வரி  மாதம்   26ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 23ஆம் திகதி வரை நடை­பெ­ற­வுள்ள நிலையில் இலங்கை தொடர்பில் நான்கு முனை  பிர­சாரப் பணிகள் முன்­னெ­டுக்­கப்­படும் என எதிர்­பார்­கப்­ப­டு­கி­றது.  குறிப்­பாக அர­சாங்கத் தரப்பு பாதிக்­கப்­பட்ட மக்கள் தரப்பு  மற்றும் சர்­வ­தேச தரப்பு  தென்­னி­லங்கை  தரப்பு ஆகி­யன கடும் பிர­சாரப் பணி­களில் ஈடு­ப­ட­வுள்­ளன. 

 சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புக்­களின் அனு­ச­ர­ணை­யுடன் பாதிக்­கப்­பட்ட மக்கள் விசேட உபக்­கு­ழுக்­கூட்­டங்­க­ளையும்  தென்­னி­லங்­கையின் அமைப்­புக்­களும் இம்­முறை ஜெனி­வாவில் நடத்­து­வ­தற்கு  முயற்­சிக்­கப்­ப­டு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. அந்த  வகையில் பல்­வேறு  தரப்­புக்­களும் இம்­முறை ஜெனிவா கூட்டத் தொடரில் கலந்து கொண்டு  கடும் பிர­சாரப் பணி­களில்  ஈடு­ப­ட­வுள்­ளன. 

இலங்கை  அர­சாங்கம்  சர்­வ­தேச பங்­க­ளிப்­புடன் பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை முன்­னெ­டுத்து  பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை நிலை­நாட்­ட­வேண்­டு­மென தெரி­வித்து 2015ஆம் ஆண்டு ஜெனிவா மனித உரிமை பேர­வையின் 30 ஆவது கூட்டத் தொடரில்  பிரே­ரணை ஒன்று நிறை­வேற்­றப்­பட்­டது.  அந்தப் பிரேரணைக்கு இலங்கை அரசாங்கமும்  அனுசரணை வழங்கியிருந்தது. 

அந்தப் பிரேரணையானது கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற  ஐ.நா. மனித உரிமை பேரவையின் 34 ஆவது  கூட்டத் தொடரில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு  இலங்கைக்கு மேலும் இரண்டு வருடகால அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி  எதிர்வரும்  2019ஆம் ஆண்டு வரை   இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது

இதேவேளை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட பயங்கரவாதத்தை ஒடுக்கும் போது  அடிப்படை சுதந்திரம் மற்றும்  மனித உரிமையை  பாதுகாப்பது தொடர்பான  ஐ.நா.வின் விசேட நிபுணர்  பென் எமர்சன்    இம்முறை  ஜெனிவா  மனித உரிமை பேரவையில்    தனது இலங்கை விஜயம் குறித்த அறிக்கையையே  தாக்கல்  செய்யவுள்ளார்.