இலங்கை – மேற்­கிந்­தியத் தீவுகள் அணி­க­ளுக்­கி­டையில் நடை­பெ­ற­வுள்ள இரண்­டா­வது இரு­ப­துக்கு- 20 கிரிக்கெட் போட்டி நாளை 11 ஆம் திக­திக்கு மாற்­றப்­பட்­டுள்­ள­தாக இலங்கை கிரிக்கெட் நிறு­வனம் அறி­வித்­துள்­ளது.சமூக நீதிக்­கான மக்கள் இயக்­கத்தின் இணைப்­பா­ளரும் கோட்டே நாக விகா­ரையின் விகா­ரா­தி­ப­தி­யு­மான மாது­லு­வாவே சோபி­த­தே­ரரின் இறு­திக்­கி­ரி­யைகள் எதிர்­வரும் 12 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை இடம்­பெ­ற­வுள்­ளன. இந்­நி­லையில்இ அன்­றைய தினத்தை தேசிய துக்­க­தி­ன­மாக அர­சாங்கம் பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்­ளது.


இத­னை­ய­டுத்து கிரிக்கெட் போட்டி நடை­பெறும் திகதி மாற்றம் செய்­யப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. கொழும்பு ஆர்.பிரே­ம­தாஸ மைதா­னத்தில் எதிர்­வரும் 12 ஆம் திகதி நடை­பெ­ற­வி­ருந்த போட்­டியே ஒருநாள் முன்­கூட்டி 11 ஆம் திக­திக்கு மாற்­றப்­பட்­டுள்­ளது.


இதே­வேளை இலங்கை மேற்­கிந்­தியத் தீவுகள் அணி­க­ளுக்­கி­டையில் நடை­பெற்ற முத­லா­வது இரு­ப­துக்கு 20 போட்­டியில் 30 ஓட்­டங்­களால் இலங்கை அணி வெற்­றி­பெற்­றது. நேற்று கண்டி பல்­லே­க­லையில் நடை­பெற்ற இப்­போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய இலங்கை அணி நிர்­ண­யிக்­கப்­பட்ட 20 ஓவர்­களில் 3 விக்­கெட்­டுக்­களை மாத்­திரம் இழந்து 215 ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொண்­டது.


இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்­பாட்ட வீரர்­க­ளாகக் கள­மி­றங்­கிய குசல் மற்றும் டில்ஷான் ஆகியோர் அதி­ரடி ஆட்­டத்தைத் தொடக்கிக் கொடுக்க அடுத்து வந்த வீரர்­களும் அதையே தொடர்ந்­தனர். இதில் குசல் 40 ஓட்­டங்­க­ளையும், டில்ஷான் 56 ஓட்­டங்­க­ளையும், ஜய­சூ­ரிய 36 ஓட்­டங்­க­ளையும் பெற்­றுக்­கொண்­டனர். அடுத்து ஜோடி சேர்ந்த சந்­திமால் மற்றும் மெத்­தியூஸ் ஆகியோர் அபா­ர­மாக ஆடினர். மெத்­தியூஸ் 13 பந்­து­களுக்கு 37 ஓட்­டங்­க­ளையும்இ சந்­திமால் 19 பந்­து­க­ளுக்கு 40 ஓட்­டங்­க­ளையும் விளா­சினர்.


இறு­தியில் மேற்­கிந்­தியத் தீவு­க­ளுக்கு 216 ஓட்­டங்கள் வெற்றி இலக்­காக நிர்­ண­யிக்­கப்­பட்­டது. வெற்றி இலக்கை நோக்கி கள­மி­றங்­கிய மேற்­கிந்­தியத் தீவுகள் அணி 19.5 ஓவர்­களில் சகல விக்­கெட்­டுக்­க­ளையும் இழந்து 185 ஓட்­டங்­களை மாத்­திரம் பெற்று 30 ஓட்­டங்கள் வித்­தி­யா­சத்தில் தோல்­வியைத் தழு­விக்­கொண்­டது. இதில் பிளட்சர் அதிகபட்ச ஓட்டங்களாக 57 ஓட்டங்களை விளாசினார். பந்துவீச்சில் இலங்கை அணி வீரர் சேனாநாயக்க 4 விக்கெட்டுக்களை வீழ்த்தி அசத்தினார். மலிங்க மற்றும் சிறிவர்தன ஆகி யோர் தலா இரண்டு விக்கெட் டுக்கள் வீதம் வீழ்த்தினர்.