வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட சிகரட் தொகையுடன் நபரொருவர் கட்டுநாயக்க விமானநிலைய சுங்க பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை டுபாயில் இருந்து இந் நாட்டுக்கு வந்த குறித்த நபரின் பயணப்பையில் இருந்து சுமார் 20 ஆயிரம் சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், அவற்றின் பெறுமதி ரூபாய் 10 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர், நீர்கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த 26 வயதான நபர் என தெரியவந்துள்ளது.

இதேவேளை, கைப்பற்றப்பட்ட சிகரட் தொகை அரசுடைமையாக்கப்பட்டுள்ளதுடன் சுங்க பிரிவால் ரூபாய் 25 ஆயிரம் தண்டப் பணம் விதித்து குறித்த நபர் விடுவிக்கப்பட்டுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.