(எம்.எம் மின்ஹாஜ்)

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை ஒரு மணிக்கு பதுளை ஹெரிடேஜ் ஹொட்டலில் இருந்து  ஊடகங்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்த உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளைய தினம் கண்டிக்கும் விஜயம் செய்யவுள்ளார். இதன்போது மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர்களையும் சந்தித்து ஆசிர்வாதம் பெறவுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாளை பகல் ஒரு மணிக்கு பதுளையிலுள்ள ஹெரிடேஜ் ஹொட்டலில் இருந்து ஊடகங்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்த திட்டமிட்டுள்ளார். 

இந்த விசேட உரையை அடுத்து கண்டிக்கு விஜயம் செய்யவுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இரவு 7 மணிக்கு மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெறவுள்ளார். 

ஞாயிற்று கிழமையன்று மறைந்த முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களுள் ஒருவருமான டீ.பி விஜேதுங்கவின் 100 ஆவது ஜனன தின நிகழ்வு தொடாங்வெல ஹெல்ஸ் ரீஜன்சி ஹோட்டலில் நடைபெறவுள்ளதோடு இதில் பிரதமரும் கலந்துகொள்ள உள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினது விஜயத்திற்கு அமைச்சர்களான லக்ஷ்மன் கிரியெல்ல , எம்.எச்.ஏ ஹலீம் உள்ளிட்ட அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடதக்கது.