பிரபல நடிகர் விஜய குமாரதுங்க, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா போன்ற முக்கிய நபர்களை தடுத்து வைத்திருந்த சிறைச்சாலையிலுள்ள எஸ். வாட்டு எனும் பிரிவு திடீரென புனர்நிர்மாணம் செய்வதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த நாட்டின் பிரபல நபர்கள் கைது செய்யப்பட்ட போதெல்லாம் இந்த பிரிவிலேயே அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எஸ். வாட்டு பிரிவு  இவ்வாறு திடீரென புனர்நிர்மாணம் செய்யப்பட்டமை, நாட்டில் முக்கிய புள்ளியொருவர் மிக விரைவில் கைது செய்யப்படுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவது காரணமாக இருக்கலாம் என சிறைச்சாலை அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.