சர்வதேச மரதன் போட்டியை முன்னிட்டு நாளை அதிகாலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் கொழும்பின் சில வீதிகளில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து  பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

கோட்டை சைத்திய வீதி, காலி முகத்திடல் சுற்றுவட்டத்தில் இருந்து கொள்ளுபிட்டி சந்தி வரையான வீதி மற்றும் கொள்ளுபிட்டியில் இருந்து வௌ்ளவத்தை வரையிலான மெரைன் டிரைவ் வீதி ஆகிய வீதிகளே மட்டுப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.