எதிர்வரும் நாட்களில் மரக்கறி விலை மேலும் உயரலாம் என அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனம் அறிவித்துள்ளது.

மரக்கறி விவசாயிகளுக்கு உரமானியம் வழங்கப்படாமை காரணமாக கூடிய விலை கொடுத்து உரங்களை கொள்வனவு செய்ய வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளதாக சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.