(நா.தினுஷா)

மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் விரைவாக நடத்தப்பட வேண்டும்.  மாகாண சபைகள் என்பது மக்களின் உரிமை. மக்களின் உரிமையை பறிக்காமல் அரசாங்கம் மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்பில் தனது கவனத்தில் கொள்ள வேண்டுமென்று பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். 

Image result for திஸ்ஸ விதாரண

மாகாண சபைகளுக்களுக்கான தேர்தல் தொடர்பில் விளக்கமலிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

கிழக்கு , வடமத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களுக்கான மாகாணசபைகளின் கால எல்லை கடந்த வருடத்துடன் நிறைவடைந்துள்ளது. கடந்த காலங்களில் உள்ளூராட்சிமன்ற தேர்தல்கள் தொடர்பில் கவனம் செலுத்தியமையினால் இது தொடர்பில் சிறப்புரிமை கொடுக்கப்படவில்லை.  அரசாங்கம் மாகாணசபைகளுக்கான தேர்தல் தொடர்பில் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

அதேபோன்று இவ்வருடம் செப்டம்பர் மாதமாகும் போது வட, வட மத்திய மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான பதவிகாலமானது  எதிர்வரும்  செப்படம்பர் மாதத்துடன் நிறைவடையவுள்ளது. உள்ளூராட்சிமன்றங்களுக்கான தேர்தல் பிற்போடப்பட்டதை போனறல்லாமல் மாகாணசபைகளக்கான தேர்தல் நடத்தபடுவது குறித்து தீர்மானங்கள் எடுக்கபடுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது. 

மாகாண சபைகள் என்பது மக்களின் உரிமை. அவர்களின உரிமை மீறப்படாத வகையில் அரசாங்கம் நன்மதிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.