ரோமானியாவை சேர்ந்த 18 வயதான  மொடல் அழகி அலெக்ஸாண்டிரா கெஃப்ரென்  கடந்த வருடம் நவம்பர் மாதம் தனது கன்னித்தன்மை 1.7 மில்லியன் யூரோக்களுக்கு ஏலத்தொகை வந்துள்ளதாக செய்தி வெளியிட்டு உலக பிரபலம் அடைந்தார்.

தற்போது  அலெக்ஸாண்டிரா தனது கற்பை 35 கோடிக்கு ஒரு பெயர் வெளியிடப்படாத ஹாங்காங் தொழிலதிபர் ஒருவரிடம் விற்றுள்ளார்.

மேலும் அலெக்ஸாண்டிரா கெஃப்ரென் தன் கற்பை  ஏலத்தில் வென்ற ஹாங்காங் தொழிலதிபர் மிகவும் நட்புடன் பழகக்கூடியவர் என்றும் அவருடன் தொலைபேசியில் பேசியதை வைத்தே இதை தான் அறிந்ததாகவும் கூறியுள்ளார்.

அதிக தொகை கோருவோருக்கு தனது கன்னித்தன்மையை ஏலத்தில் விட்டு தரவிருப்பதாக செய்தி வெளியான பிறகு அலெக்ஸாண்டிரா கெஃப்ரெனை அவரது குடும்பம் ஒதுக்கிவிட்டது.

ஹாங்காங் தொழிலதிபருடன் தான் தங்கவிருக்கும் ஹோட்டலையும் புக் செய்துவிட்டார் அலெக்ஸாண்டிரா கெஃப்ரென். இந்த செயலை இவர் சிண்ட்ரெல்லா எஸ்கார்ட்ஸ் உடன் இணைந்து செய்துள்ளார்.