ஆப்பிள் நிறுவனத்தின் வயர்லெஸ் இயர்போன்களான ஏர்பாட்ஸ் அதிநவீன அம்சங்களுடன் அப்டேட் செய்யப்பட்டு 2018 இல் வெளியிடப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் வயர்லெஸ் இயர்போன் வியாபாராத்தை விரிவுப்படுத்த ஆப்பிள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அந்த வகையில் ஆப்பிள் வயர்லெஸ் இயர்போன்களான ஏர்பாட்ஸ் புதிய அப்டேட் பெற இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி புதிய ஹார்டுவேர் அம்சங்களுடன் ஏர்பாட்ஸ் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன், ஐபேட் மற்றும் ஆப்பிள் வாட்ச் போன்று ஏர்பாட்ஸ்-ம் 2018-இல் புதிய அப்டேட் பெற இருக்கிறது.

புதிய மாடல் ஏர்பாட்ஸ் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் புதிய மாடலில் இயர்போன்களை தொடாமல் சிரியை பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படலாம். இது ஐபோன் அல்லது ஹோம்பாட்களில் சிரி வேலை செய்வதை போன்றே வயர்லெஸ் இயர்போன்களிலும் வேலை செய்யும் என கூறப்படுகிறது.

ப்ளூடூத் இணைப்புகளை சீராக இயக்க மேம்படுத்தப்பட்ட ஆப்பிள் வயர்லெஸ் சிப்செட் கொண்டிருக்கும் என்றும் இந்த சிப்செட் ஆப்பிள் ஆய்வு மையங்களில் B288 என அழைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி நீர் துளிகள் இயர்போன் மீது விழுந்தாலோ அல்லது மழைத்துளிகளிலும் பாதிக்காத வகையில் இருக்கும் என கூறப்படுகிறது.