துருக்கி மற்றும் ரஷ்யாவில் நீண்ட ஆண்டுகள் தம்மை பாலியல் அடிமையாக நடத்தியதாக கூறி தொழிலதிபர் மீது உக்ரைன் நட்டை சேர்ந்த பிரபல மொடல் அழகி ஒருவர் புகார் அளித்துள்ளார்.
உக்ரைன் நட்டை சேர்ந்த 25 வயதான அழகி நடாஷா செரிப்ரி தமக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து துருக்கி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

"கடந்த 7 ஆண்டுகளில் ஒரு நாள் கூட நிம்மதியாக தூங்கியது இல்லை, தினசரி கொடூரமான சித்ரவதைக்கும் பாலியல் பலாத்காரத்திற்கும் உள்ளானேன்.
என்னைவிட 30 வயதுக்கு மூத்த அந்த நபரை சந்தித்த ஒரு மாதத்திலேயே அவர் மீது ஈர்ப்பு வந்தது. ஆனால் அது எனது வாழ்க்கையையே பாழாக்கியது.
வலுக்கட்டாயமாக என்னை கடத்திச் சென்ற அந்த நபர் தொடர்ந்து 7 ஆண்டுகள் அடிமையாகவே நடத்தி வந்தார். இதனால் நான் இரண்டு பிள்ளைகளுக்கு தாயானேன். 6 மாத கர்ப்பமாக இருந்த நிலையில் துருக்கி நாட்டுக்கு அழைத்துச் சென்ற அவர், ஒரு கைதி போலவே மிக கொடூரமாக நடத்தினார்" என முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நபரின் முன்னாள் மனைவிக்கு பிறந்த மகன் நடந்த கொடுமை அனைத்தையும் துருக்கி பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து நடவடிக்கை எடுத்த துருக்கி பொலிஸார் நடாஷாவை உக்ரைனுக்கு நாடு கடத்தியது.
இருப்பினும் உக்ரைன் சென்று நடாஷாவை மீண்டும் வலுக்கட்டாயமாக அழைத்து சென்று மாஸ்கோவில் உள்ள புறநகர் பகுதியில் அந்த நபர் 2 ஆண்டு காலம் சிறை வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் அவரிடம் இருந்து உயிர் தப்பும் போது மிகவும் வலுவிழந்து ரத்தப்போக்கால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது தலைமறைவாக இருக்கும் குறித்த நபரை ரஷ்ய பொலிஸார் தேடிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.