மெக்சிக்கோ சிறைச்சாலையொன்றில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 52 கைதிகள் உயிரிழந்துள்ளனர்.

கூரிய ஆயுதங்கள் மற்றும் பொல்லுகளால் தாக்கப்பட்டதில் 12 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.எவ்வாறாயினும் இந்த மோதல்கள் மூலம் எந்தவொரு கைதியும் தப்பியோடவில்லை எனவும்,சிறைச்சாலையில் அமைதியின்மை நிலவுவதுடன் மோதல்கள் குறித்து தகவல்களை வழங்க கோரி கைதிகளின் உறவினர்கள் சிறைச்சாலை வளாகத்தில் கூடியிருப்பதால் அப்பகுதி முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ளது.

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் இன்னும் சில தினங்களில் குறித்த சிறைச்சாலைக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.