தேசிய ஒலிம்பிக் சங்கத்திற்கான தேர்தல் இன்று மாலை 4 மணிக்கு விளையாட்டுத்துறை அமைச்சில் விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெறவுள்ளது.
கடந்த ஒன்பது வருடங்களுக்குப் பிறகு தேசிய ஒலிம்பிக் சங்கத் தேர்தல் நடைபெறவுள்ளதால் சற்று பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
இம்முறை தேசிய ஒலிம்பிக் சங்கத் தலைமைப் பொறுப்பிற்கு சுரேஷ் சுப்ரமணியமும், ரொஹான் பெர்னாண்டோவும் போட்டியிடுகின்றனர்.
அத்தோடு தலைவரைத் தவிர உப தலைவர்கள், செயலாளர், பொருளாளர் என 12 பதவிகளுக்கான வாக்கெடுப்பும் நடைபெறவுள்ளது.
சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக இருந்த ஹேமசிறி பெர்னாண்டோ இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை.
தற்போதைய தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் செயலாளர் நாயகமாக செயற்பட்டு வரும் மெக்ஸ்வெல் டி சில்வா, சுரேஷ் சுப்ரமணியம் தலைமையிலான அணியின் அதே பதவிக்கு போட்டியிடுகின்றார்.
சுரேஷ் சுப்ரமணியம் இலங்கை டென்னிஸ் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும் ஆசிய டென்னிஸ் சங்கத்தின் செயலாளராகவும் செயற்பட்டவர்.
அதேவேளை சுரேஷ் சுப்ரமணியத்தை எதிர்த்து போட்டியிடும் ரொஹான் பெர்னாண்டோ படகோட்டி விளையாட்டு சங்கத்தின் தலைவராக உள்ளார். அதேவேளை தற்போதையஒலிம்பிக் சங்கத் தின் நிதியி யல் குழு உறுப் பினராகவும் செயற்பட்டு வந்தவர்.
ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறவுள்ள இத் தேர்தலில் வாக்களிக்க 31 சங்கங்கள் தகுதிபெற்றுள்ளன.
ஒலிம்பிக் சங்கத் தேர்தலில் வெற்றியீட்டப்போகும் அணி எது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM