இலங்­கையில் நடை­பெ­ற­வுள்ள முத்­த­ரப்பு போட்­டியில் விராட் கோஹ்லி விருப்­பப்­பட்டால் அவ­ருக்கு ஓய்வு கொடுக்­கப்­படும் என்று இந்­திய கிரிக் கெட் சபை அறி­வித்­துள்­ளது. 

விராட் கோஹ்லி தலை­மை­யி­லான இந்­திய கிரிக்கெட் அணி தற்­போது தென்­னா­பி­ரிக்­காவில் விளை­யாடி வரு­கி­றது. எதிர்­வரும் 24ஆம் திக­தி­யுடன் இத் தொடர் முடி­கி­றது.

அடுத்து இந்­திய அணி இலங்­கையில் நடை­பெறும் முத்­த­ரப்பு இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் போட்­டியில் விளை­யா­டு­கி­றது. 

இத் தொட­ரி­லி­ருந்து இந்­திய அணித் தலைவர் விராட் கோஹ்லி வில­கலாம் என்று தகவல் வெளி­யா­கி­யுள்­ளது. தொடர்ந்து போட்­டி­களில் விளை­யாடி வரு­வதால் அவர் ஓய்வு கேட்­க­வுள்­ளாராம்.

இந் நிலையில் இலங்­கை தொடரில் கோஹ்லி விருப்­பப்­பட்டால் அவ­ருக்கு ஓய்வு கொடுக்­கப்­படுெமன இந்திய கிரிக்கெட் சபை அறி­வித்­துள்­ளது. 

இது­கு­றித்து சபை நிர்­வாகி ஒருவர் கூறி­ய­தா­வது:-

கோஹ்லி ஓய்வு பெற விரும்­பினால் அவ­ருக்கு ஓய்வளிக்­கப்­படும். விளை­யா­டு­வதா, வேண்­டாமா என்­பது பற்றி அவர் தான் முடிவு செய்ய வேண்டும்.

இவ்­வாண்டு இதுதான் கடைசி தொடர் என்­பதால் அவர் விளையாடவே விரும்பலாம். இதன்பிறகு ஐ.பி.எல். போட்டி தான் இருக்கிறது என்று கூறி யுள்ளார்.