வடக்கின் பிரபல பாடசாலைகளான மகாஜனா கல்லூரி மற்றும் சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரி அணிகளுக்கிடையிலான மாபெரும் கிரிக்கெட் சமர் இன்று ஆரம்பமாகவுள்ளது.
இன்று ஆரம்பமாகும் இப்போட்டியானது தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி மைதானத்தில் இரு நாட்கள் நடைபெறவுள்ளது.
கடந்த 2000ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இவ்விரு அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் சமரானது இம்முறை 18ஆவது முறையாகவும் நடத்தப்படுகின்றது.
இவ்விரு அணிகளுக்கிடையில் இதுவரை 17 பெரும் சமர் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் மகாஜனா கல்லூரி அணி 5 முறையும் ஸ்கந்தவரோதயா கல்லூரி 4 முறையும் வெற்றிபெற்றுள்ளன.
அதேவேளை இத் தொடரின் ஏனைய 8 போட்டிகள் வெற்றிதோல்வியின்றி சமநிலையில் நிறைவடைந்துள்ளன.
கடந்த வருடம் நடைபெற்ற போட்டியும் சமநிலையில் முடிவடைந்த நிலையில் இத் தொடரில் இறுதியாக வெற்றிபெற்ற அணியாக மகாஜனா கல்லூரி விளங்குகிறது.
இன்று ஆரம்பமாகவுள்ள இப் போட்டித் தொடரில் வெற்றிவாகை சூடப்போவது யார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM