(எம்.எம்.மின்ஹாஜ்,ஆர்.யசி)

அதிபர்களுக்கான தலைமைத்து பயிற்சி ஒரு சில சம்பவங்களுக்காக நிறுத்த வேண்டியதில்லை. எனினும் அம்பாந்தோட்டையில் அதிபர் ஒருவர் தலைமைத்துவ பயிற்சியின் போது மரணமடைந்தமை தொடர்பில் துரித அறிக்கையொன்றை கோரியுள்ளேன்.

 எனினும் தற்போது அதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இனிமேல் உடற்பரிசோதனை செய்த பின்னரே தலைமைத்துவ பயிற்சியில் இணைத்து கொள்ளவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போது டளஸ் அழகப்பெரும எம்.பி எழுப்பிய மேலதிக கேள்வியின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.