இலங்கையில் முன்னணி வகிப்பதும் மிகப் பெரியதுமான வைத்திய ஆலோசனை பெறும் வலையமைப்பாக eChannelling PLC விளங்குகிறது.

 இது இலங்கையில் மிகவும் நம்பிக்கை பெற்ற Lanka Hospitals PLC உடன் தனது கூட்டிணைவினைப் பற்றி அறிவித்தது. இதன் போது புத்தம் புதிய மற்றும் தனித்துவமான சுய உதவி தன்னியக்க இயந்திரங்களை அறிமுகப்படுத்தியது. 

இந்நிகழ்வு, மருத்துவர் சரத் பரனவிதான – தலைவர் Lanka Hospitals, P. G. குமாரசிங்ஹ சிறிசேன – தலைவர், ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் மொபிடெல் சகிதம் ஊழியர்கள் மற்றும் நோயாளர்கள் முன்னிலையில் இடம்பெற்றது.

இலங்கையில் முதன் முறையாக வாடிக்கையாளர்களுக்கு தங்களுக்கு தேவையான வைத்தியர்களின் ஆலோசனைகளை சுய உதவி தன்னியக்க இயந்திரங்கள் மூலம் எளிதாக செய்து கொள்ள முடியும். மிகவும் எளிதாக பாவிக்கக் கூடிய இந்த சுய உதவி தன்னியக்க இயந்திரங்கள், Lanka Hospitals கிடைக்கப்பெறுகின்றன. நோயாளர்கள், வாடிக்கையாளர்களுக்கு எவ்வித சிக்கலுமின்றி வைத்திய ஆலோசனை நேரங்களைப் பெற்றுக் கொள்ளலாம். இந்த புதிய சேவையானது சௌகரியத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாது Lanka Hospitals மற்றும் eChannelling இன் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் உதவி செய்கிறது.

இது குறிப்பாக Lanka Hospitals வருகை தந்து வைத்தியருக்கான நேரத்தை ஒதுக்கிக் கொள்ளும் நோயாளர்கள் அல்லது வாடிக்கையாளர்களுக்கு ஓர் சிறந்த தெரிவாகும். சுய உதவி தன்னியக்க இயந்திரங்கள் ஆனது நீண்ட நேரம் வரிசையில் நிற்கும் அவசியத்தை ஏற்படுத்தாது என்பதுடன் மேலதிக செலவுகளும் இல்லை.

நோயாளர்களுக்கு எந்தவொரு கையடக்க வலையமைப்பிலிருந்தும் 225 என்ற எண்ணுக்கு அழைத்து அல்லது SLT இணைப்பிலிருந்து 1225 என்ற எண்ணுக்கு அழைத்து eChannelling மூலம் வைத்தியருக்கான நேரத்தை ஒதுக்கிக் கொள்ள முடியும். அத்துடன் eChannelling Mobile App அல்லது www.echannelling.com மூலமும் வைத்தியருக்கான நேரத்தை ஒதுக்கிக் கொள்ள முடியும்.

தேசிய கையடக்கத் தொலைபேசிச் சேவை வழங்குனரான மொபிடெல், eChannelling PLC  தன்னுடன் இணைத்துக் கொண்டுள்ளதன் மூலம் சுகாதாரநல சேவையை அடுத்த நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது. அத்துடன் இக்கூட்டிணைவானது நாட்டின் தொலைத்தொடர்புத் துறையில் அதன் முக்கிய நிலையை உறுதிப்படுத்துகிறது.