யுத்த பூமியில் மிளிரும் ஒரு இளம் கிரிக்கெட் நட்சத்திரம்

Published By: Robert

22 Feb, 2018 | 09:22 AM
image

யுத்த பூமி­யான ஆப்­கா­னிஸ்தான் நாட்டின் சுழற்­பந்து வீச்­சாளர் ரஷித் கான் 19 வய­தி­லேயே ஒருநாள் பந்துவீச்சு தர­வ­ரி­சையில் முத­லிடம் பிடித்து வர­லாற்று சாதனை படைத்­துள்ளார். 

போரில் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்ட ஆப்­கா­னிஸ்தான் இன்று கிரிக்கெட் உலகில் தவிர்க்க முடி­யாத அணி­யாக வளர்ந்து நிற்­கி­றது. 

ஆப்­கா­னிஸ்தான் கிரிக்கெட்டைப் பற்றிப் பேசி னால், தாஜ் மாலிக் ஆலம் என்ற மனி­தரின் பெயரும் கூடவே ஒட்டிக் கொண்டு வந்­து­விடும். 1987ஆம் ஆண்டு

உலகக் கிண்ணம் நடை­பெற்­ற­போது பாகிஸ்­தானில் உள்ள அக­திகள் முகாமில் சிறு­வ­னாக இருந்­தவர் இவர். 

அக­திகள் முகாமில் கிரிக் கெட் கற்­றுக்­கொண்ட அவர், விளை­யாட்­டு­க­ளுக்குக் கூடத் தடை விதிக்கப்பட்டிருந்த ஆப்கா­னிஸ்­தானில் கிரிக்­கெட்டை நிர்­மா­ணிக்கும் முயற்­சி­களை முன்­னெ­டுத்­தவர். 'ஆப்கன் கிரிக்கெட் கழகம்' என்ற பெயரில் அணியைத் தயார் செய்தார்.

தலி­பான்கள் வீழ்ச்­சிக்குப் பிறகு, ஆப்­கா­னிஸ்தான் கிரிக்கெட் அணி உரு­வாகக் கார­ண­மாக இருந்­தது மட்­டு­மின்றி அந்த அணிக்கு முதல் பயிற்­சி­யா­ள­ரா­கவும் இருந்தார். கிரிக்கெட் வீர­ராக மட்­டு­மின்றி அணியின் நிர்­வாகி, அணித் தேர்­வாளர் எனப் பல முகங்கள் இவ­ருக்குண்டு. 

இவரின் கடும் முயற்­சியால் சிறிது சிறிதாக முன்­னே­றிய ஆப்கான் அணி, கடந்த உலகக் கிண்ணத் தொடரில் பங்­கேற்­றது. 

யுத்த பூமி­யான ஆப்­கா­னிஸ்தான் வர­லாற்றில் கிரிக்கெட் நல்ல மாறு­தலைக் கொண்­டு­வந்­துள்­ளது.

அதன் வெளிப்­பாடே கிரிக்கெட் உலகின் ஜாம்­ப­வான்­களை எல்லாம் தோற்­க­டித்து இன்று ஆப்­கா­னிஸ்­தானின் வீரர் ஒருவர் அரி­யணை ஏறி­யி­ருக்­கிறார்.

தற்­போது நடை­பெற்று முடிந்த சிம்­பாப்­வேக்கு எதி­ரான ஐந்து போட்­டிகள் கொண்ட தொடரை ஆப்­கா­னிஸ்தான் அணி 4–1 என வெற்­றி­கொண்­டது. இந்த போட்­டி­களில் ரஷித்கான் 16 விக்­கெட்­டுக்­களை வீழ்த்­தினார்.

இதேபோல் இந்­திய வேகப்­பந்து வீச்­சாளர் பும்­ராவும் ஒருநாள் போட்­டிக்­கான பந்துவீச்சு தர­வ­ரி­சையில் முத­லி­டத்தை பிடித்­துள்­ளார். இரு­வரும் 787 புள்ளிகளுடன் உள்ளனர். குறிப்­பாக ரஷித்கான் 19 வயது 153 நாட்களில் முதலிடத்தைப் பிடித்து மிக இளம் வயதில் முதலிடத்தைப் பிடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49