பிணை­முறி அறிக்கை குறித்து சபையில் முன்­வைக்­க­வி­ருந்த கார­ணி­களை தடுக்க ஆளும் தரப்பும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் இணைந்து செயற்­பட்­டன இது திட்­ட­மிட்ட  சதி­யென கூட்டு எதிர்க்­கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வாசு­தேவ நாண­யக்கார குற்றம் சுமத்தினர். எனினும் நான் முன்­வைத்த கோரிக்கை நியா­ய­மா­னது, சட்ட விதி­மு­றைக்கு ஏற்­ற­தா­கவே அமைந்­துள்­ளது என்று  குறிப்­பிட்ட கூட்­ட­மைப்பின் எம்.பி.  சுமந்­திரன் வாசு­தேவ நாண­யக்­கா­ரவின்  குற்­றச்­சாட்டை நிரா­க­ரித்தார். 

Image result for எம்.பி. சுமந்­திரன்

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை ஒழுங்கு பிரச்­சினை எழுப்பி உரை­யாற்­று­கையில் கூட்டு எதிர்க்­கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வாசு­தேவ நாண­யக்­கார கூறு­கையில். 

மத்­திய வங்கி பிணை­முறி ஆணைக்­குழு அறிக்கை மற்றும் பாரிய நிதி மோசடி குறித்த ஜனா­தி­பதி ஆணைக்­குழு அறிக்­கைகள் நேற்­றைய தினம் ( நேற்று முன்­தினம்) விவா­தத்­திற்கு எடுத்­து ­கொள்­ளப்­ப­ட­வி­ருந்­தன. இவை  விவா­தத்­திற்கு எடுத்­துக் ­கொள்­ளப்­ப­ட­வி­ருந்த நிலையில் கூட்டு எதிர்க்­கட்சி சார்பில் நானே விவா­திக்க தயா­ரானேன். எனினும் பாரிய நிதி மோசடி ஆணைக்­கு­ழுவின் அறிக்கை தமிழ்மொழியில் இல்லாத கார­ணத்­தினால் தம்மால் விவா­தத்தில் ஈடு­பட முடி­யாது என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் எம்.பி சுமந்­திரன் சபையில் முரண்­பட்டார். அவ­ரது  கோரிக்­கையின் நியா­யத்தை கருத்திற் கொண்டு விவா­தத்தை பிற்­போட முடியும் என்­பதை நானும் ஏற்­றுக்­கொண்டேன். எனினும் அதன் பின்னர் ஆராய்ந்து பார்த்­ததில் கடந்த 6 ஆம் திகதி நடத்­த­வி­ருந்த விவா­தத்தின் போது  மொழி பெயர்ப்பு பிரச்­சி­னை­யினை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு வெளி­ப்ப­டுத்­த­வில்லை. பாராளு­மன்ற செயற்­பா­டுகள் தொடர்­பி­லான கூட்­டத்­திலும் இந்தப் பிரச்­சி­னை­யினை முன்­வைக்­க­வில்லை. அப்­போ­தெல்லாம் வாய்­மூடி இருந்த சுமந்­திரன் ஏன் இறுதி நேரத்தில் விவா­தத்தை குழப்­பினார். ஏனெனில் பிணை­முறி அறிக்கை குறித்து நாம் சபையில் முன்­வைக்­க­வி­ருந்த கார­ணி­களை தடுக்க வேண்டும் என்ற தேவை அர­சாங்­கத்­திற்கு இருந்­தது. பிர­த­மரும் நெருக்­க­டியில் இருந்த நிலையில் இவர்கள் இரு தரப்பும் இணைந்து முன்­னெ­டுத்த சதி­யென நான் சபையில் குற்றம் சுமத்­து­கின்றேன் என குறிப்­பிட்டார். 

இதன்­போது சபையில்  ஒழுங்கு பிரச்­சினை எழுப்பி கருத்துத் தெரி­வித்த கூட்­ட­மைப்பு எம்.பி. சுமந்­திரன் கூறு­கையில், 

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வாசு­தேவ நாண­யக்­கார கூறும் கருத்து தவ­றா­னது. நிலை­யியல் கட்­ட­ளைக்கு அமை­யவும்  இது தவ­றா­னது. 

1970 ஆண்­டு­களில் இருந்து பாரா­ளு­மன்­றத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் வாசு­தேவ நாண­ய­க்கார இந்த காரணி குறித்து தெரிந்­தி­ருக்க வேண்டும். கடந்த 6 ஆம் திகதி விவாதம் நடத்­தப்­ப­ட­வி­ருந்த நிலையில் கூடிய கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தில் இந்த விடயம் தொடர்பில் தெரி­வித்தேன். விவா­தத்தை பிற்­போட எமக்கு எந்த தேவையும் இல்லை. அறிக்­கைகள் ஆங்­கி­லத்தில் இருக் கும் நிலையில் விவா­தத்­திற்கு முன்னர்  அறிக்கை தமிழ் மொழியில் வழங்­க­ப்பட வேண்டும் என கோரி­யி­ருந்தேன். சிங்­கள அறிக்­கையை வைத்து எம்மால் விவா­தத்தை நடத்த முடி­யாது. அவ்­வாறு இருக்­கையில் வாசு­தேவ நாண­ய­க்கார போன்­றவர் என்­னு­டைய இந்த கோரிக்­கைக்கு முரண்­ப­டு­வது ஆச்­ச­ரி­ய­மாக உள்­ளது. நான் சட்ட ரீதியில் ஏற்­று­கொள்­ளக்­கூ­டிய கார­ணியை நான் முன்­வைத்தேன் என குறிப்­பிட்டார். 

இதன்­போது சபா­நா­யகர் பதி­ல­ளிக்­கையில் தெரிவித்ததாவது,

சுமந்­திரன் எம்.பி. முன்­வைத்த கார­ணி­களை   நீதி சார்ந்­த­தாக நான் கரு­து­கின்றேன். பாரிய எண்­ணிக்­கை­யான ஆவணங் ­களை  கொண்ட அறிக்கை குறித்து விவாதம் நடத்­து­வது அவர்­க­ளுக்கு ஏற்ற மொழியில் இருக்க வேண்டும். எனினும் மொழி மாற்று நட­வ­டிக்­கை­களில் ஏற்­பட்­டுள்ள தாம­தமே இதற்கு கார­ண­மாகும். இதில் ஒரு­வ­ருக்கு ஒருவர் குற்றம் சுமத்­து­வதில் அர்த்­த­மில்லை. ஜனா­தி­பதி  செய­ல­கத்தில் இந்த அறிக்­கையின் மொழி­மாற்று பிர­தி­களை முன்­வைக்­க­ வேண்டும் என நான் கேட்­டு ­கொண்­டுள்ளேன். விரைவில் அறிக்கை தருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். எவ்வாறு இருப்பினும்  சபையின் பூரண இணக்கப்பாட்டுடன் விவாதத்தை ஒத்திவைக்க தீர்மானம் எடுக்கப்பட்டது.எனினும் விவாதத்தை ஒத்திவைக்க ஆளும் கட்சியின் சார்பில் எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை என்பது நான் பொறுப்புடன் தெரிவிக்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.