மன்னார் தேட்டவெளி ஜோசவாஸ் நகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 14 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக குறித்த இளைஞனின் பெற்றோர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

மன்னார் விடத்தல் தீவை பிறப்பிடமாகவும், தேட்டவெளி ஜோசவாஸ் நகரை வதிவிடமாகவும் கொண்ட பூபாலசிங்கம் அருள் ராஜ் வயது (33) என்ற இளைஞரே காணாமல்போயுள்ளதாக பெற்றோர் கடந்த திங்கட்கிழமை மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த இளைஞன் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞன் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்குமாறு பெற்றோர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.