ஹட்டன்  ஹைலன்ஸ் கல்லூரிக்கு ஆறுமுகன் தொண்டமானால் பெற்று கொடுக்கபட்ட 200 ஏக்கர் காணிக்கு இனந்தெரியாதவர்களால் தீ வைப்பு.

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட ஹட்டன் ஹைலன்ஸ் ஆரம்ப்பிரிவு பாடசாலைக்கு இலங்கை தொழிலாளர் காங்ரசின் தலைவரும் அதன் பொதுச்செயலாளருமான ஆறுமகன் தொண்டமானால் பெற்று கொடுக்கபட்ட 200 ஏக்கர் காணிக்கு இனந்தெரியதாவர்களால் தீ வைக்கபட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் இன்று நண்பகல் 1.30 மணி அளவில் தீவைக்கபட்டுள்ளதோடு குறித்த கல்லாரியின் பக்கம் தீ பரவி வந்த போதிலும் ஹட்டன் டிக்கோயா நகரசபை ஊ ழியர்கள் இனைந்து தீயை கட்டுபாட்டுக்கு கொண்டுவந்துள்ளதாக  ஹட்டன் - டிக்கோயா நகரசபையின் தீயனைக்கும் படையினர் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் தேயிலையும், மானாவும் கானபட்ட பகுதிக்கே தீவகைபட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார்  மேலதிக விசாரனைகளை  மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.