நோர்வூட் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ எல்பட மேற்பிரிவு தோட்டத்தில் உள்ள லயன்குடியிருப்பு ஒன்றில் பாரிய தீ பரவல் சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர் .

இத் தீ விபத்து இன்று காலை 8 மணி அளவில் இடம் பெற்றுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்

குடியிருப்பில் ஏற்பட்ட தீபரவலினால் குடியிருப்பில் இருந்த உபகரனங்கள் சில தீயில் எரிந்து சாம்பளாகியுள்ளதாகவும் தீபரவலுக்கான காரனம் குடியிருப்பில்வைக்கபட்டிருந்த விளக்கில் இருந்தே தீ  பரவியுள்ளதாக நோர்வூட் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

தோட்ட பொது மக்களும் பொலிஸாரும் இனைந்து தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் எவருக்கும் உயிர்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லையெனவும் நோர்வூட் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பாதிக்கபட்ட குடும்பத்தினருக்கு பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் கிராம உத்தியோகத்தரின் ஊடாக அம்பகமுவ செயலாளர் காரியாளயத்திற்கு அறிவிக்கபட்டு நிவாரன பொருட்களை பெற்றுகொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டிருப்பதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.