மீதொட்டமுல்லை திண்மக் கழிவு அகற்றும் பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் அகற்றப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு 50 ஆயிரம்  ரூபா கொடுப்பனவு வழங்கவுள்ளதாக அமைச்சர் கயாந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

மீதொட்டமுல்லை திண்மக் கழிவு அகற்றும் பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் அகற்றப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு சொத்து மதிப்பீட்டு பணிகள் முடிவடைந்து நட்டஈடு தொகையினை பெற்றுக் கொடுக்கும் வரை அவர்களுக்கான வீட்டு வாடகையினை தொடர்ந்து வழங்க வேண்டிய தேவை உணரப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், இனங்காணப்பட்டுள்ள 60 குடும்பங்களுக்கு மாதாந்தம் 50 ஆயிரம் ரூபா வீதம் தொடர்ந்தும் வீட்டு வாடகை கொடுப்பனவாக வழங்குவது தொடர்பில் அனர்த்த முகாமைத்து அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சவையின் அங்கீகாரம் கிடைப்பெற்றதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அமைச்சரவை சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.