பங்­க­ளாதேஷ் அணியைப் பற்றி எனக்கு எல்லாம் தெரி­யும்தான். ஆனால் போட்­டியில் நான் கள­மி­றங்கி விளை­யா­ட­வில்­லையே. நான் துடுப்­பெ­டுத்­தா­டி­யி­ருந்தால் அவர்கள் சொல்­வது போல் என்னால் தோற்­றி­ருக்­கலாம்.

ஆனால் அவர்கள் தோற்­றது இலங்கை அணி வீரர்­களின் திற­மையால் என்று தெரி­வித்தார் இலங்கைக் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்­சி­யாளர் சந்­திக்க ஹத்­து­ரு­சிங்க.

கட­ந்த மாதம் பங்­க­ளா­தே­ஷுக்கு சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்டு மூன்­று­வகைக் கிரி­க்கெட் தொடர்­க­ளிலும் விளை­யாடி அம் மூன்று தொடர்­க­ளையும் வெற்­றி­கொண்டு மூன்று கிண்­ணங்­க­ளுடன் நேற்­று­ முன்­தினம் இரவு நாடு­தி­ரும்­பிய இலங்கை அணி ஊடக­வி­ய­லா­ளர்­களை சந்­தித்­தது.

இதன்­போது கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்­கும்­போதே சந்­திக்க ஹத்­து­ரு­சிங்க மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இந்­நி­கழ்வில் பேசிய இலங்கை அணித் தலைவர் சந்­திமால், நாம் ஒரு அணி­யாக அல்­லாமல் ஒரு குடும்­ப­மா­கவே செயற்­பட்டோம். அது எமக்கு பெரிதும் உத­வி­யது.

தற்­போது இலங்கை அணி பாரிய மாற்­றத்தைக் கண்­டுள்­ளது. அதற்கு பயிற்­சி­யாளர் ஹத்­து­ரு­சிங்க மிகப்­பெ­ரிய பங்­க­ளிப்பை ஆற்­றி­யுள்ளார்.

இத் தொடர் போல எதிர்­வரும் தொடர்­க­ளிலும் இலங்கை அணி வெற்­றி­வாகை சூடும் என்ற நம்­பிக்கை நிறை­யவே இருக்­கி­றது என்று அவர் குறிப்­பிட்டார்.

இந்­நி­லையில் சந்­திக்க ஹத்­து­ரு­சிங்­க­விடம், நீங்கள் இறு­தி­யாக பங்­க­ளா­தேஷின் தலைமைப் பயிற்­சி­யா­ள­ராக இருந்­தவர். அந்தக் காரணம் இலங்­கையின் வெற்­றிக்கு உதவி யதா என்று கேட்­கப்­பட்­டது.

அதற்கு பதி­ல­ளித்த ஹத்­து­ரு­சிங்க, பங்­க­ளாதேஷ் ஊட­கங்கள் இவ்­வா­றான செய்­தி­களை வெளி­யிட்­டி­ருந்­தன.

அதை நானும் பார்த்தேன். அவர்கள் சொல்­வது போல் நடப்­ப­தற்கு நான் போட்டியில் ஆடவில்லையே. அவர்கள் எப்படி வீசுவார்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால் அவர்கள் பந்துக்கு முகம்கொடுக்க நான் துடுப்பெடுத்தாடியிருந்தால் அவர்கள் சொல்வது சரிதான். ஆனால் இது எமது திறமைக்கு கிடைத்த வெற்றி என்றார்.