தனியார் பயணிகள் பேரூந்தில் திடீரென ஏற்பட்ட தீயில் சிக்கி காயமடைந்த 17 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

தியத்தல்லாவை, கஹகொல்ல பகுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பேரூந்தில் திடீரென ஏற்பட்ட வெடிப்பையடுத்து பரவிய தீயில் சிக்கியே 17 பேரும் காயமடைந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.