விஸ்தரிப்பு திட்டத்தை முன்னெடுத்துள்ள நியு அந்தனீஸ் ஃபாம்ஸ்

Published By: Priyatharshan

20 Feb, 2018 | 05:41 PM
image

சந்தையில் அதிகரித்துச் செல்லும் கேள்வியை நிவர்த்தி செய்யும் வகையில் நியு அந்தனீஸ் ஃபார்ம்ஸ் பாரிய விஸ்தரிப்பு திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

இதன் பிரகாரம், நிறுவனத்தின் தயாரிப்புகளை மேம்படுத்தும் வகையிலான திறன் விருத்தி, செயற்பாடுகளில் மேம்படுத்தல் ஆகியன முன்னெடுக்கப்படுகின்றன. இதில் பண்ணை விஸ்தரிப்பு செயற்பாடுகளும் அடங்கியுள்ளன.

பாதுகாப்பான, பசுமையான, உயர் தரம் வாய்ந்த இறைச்சி வகைகளை சந்தையில் வெற்றிகரமாக விநியோகித்துவரும் நிலையில், நவீன தொழில்நுட்பங்களை பின்பற்றி, நவீன செயன்முறைகளை பின்பற்றி வருவதுடன் துறையில் சிறந்த செயன்முறைகளையும் பின்பற்றுகிறது.

இலங்கையின் முன்னணி இறைச்சி வகைகள் உற்பத்தியாளர் எனும் இலக்கை நோக்கி பயணிக்கும் இந்நிறுவனம், தன்வசம் உயர்  தரமான பண்ணை மற்றும் கால்நடை விருத்தி செயற்பாடுகளை கொண்டுள்ளமை, உயர் தர விலங்கு நலன்புரி நடவடிக்கைகள் மற்றும் பதப்படுத்தல் தொழில்நுட்பம் ஆகியவற்றை சர்வதேச தரங்களுக்கமைய தன்வசம் கொண்டுள்ளது. 

இந்நிறுவனம் பெற்றுள்ள GMP, HACCP மற்றும் இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் ISO-22000-2005  போன்ற தரச்சான்றிதழ்கள் நிறுவனத்தின் செயற்பாடுகளை மேலும் உறுதி செய்துள்ளன.

கோழிகளை பராமரிப்பது தொடர்பில் பாதுகாப்பான மற்றும் உத்தரவாதத்துடனான நியமங்களை இந்நிறுவனம் தெளிவாக பேணி வருகிறது. இந்த நியமங்கள் தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், சிறந்த செயன்முறைகள், நவீன தொழில்நுட்பங்களின் நிறுவுகை, மேம்படுத்தப்பட்ட வசதிகள் மற்றும் உற்பத்திக்காக புதிய முறைகளை கையாளல் போன்றவற்றினூடாக அவை உறுதி செய்யப்படுகின்றன. நிறுவனத்தின் தொழில்நுட்ப மற்றும் சாதனங்கள் பெருமளவில் ஐரோப்பா, பெல்ஜியம், அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து தருவிக்கப்பட்டவை.

நியு அந்தனீஸ் ஃபார்ம்ஸ் பிரைவட் லிமிட்டெட் தலைவரும் முகாமைத்துவ பணிப்பாளருமான எமில் ஸ்டான்லி கருத்துத் தெரிவிக்கையில்,

“எமது தற்போதைய கோழி குஞ்சுகள் பொரிக்கும் பகுதியிலிருந்து வெளிவரும் ஒரு நாள் வயதுடைய கோழிக்குஞ்சுகளின் தரம் மிகவும் உயர்வானதாக அமைந்துள்ளது. எமது பண்ணை, உற்பத்தி, விநியோகத் தொடர் மற்றும் விநியோக செயற்பாடுகள் போன்றன முழு அர்ப்பணிப்புடன் மேற்கொள்ளப்படுவதுடன் பாதுகாப்பானதாகவும் தரமானதாகவும் அமைந்துள்ளன. எமது ஊழியர்கள் ஊக்குவிக்கப்படுவதுடன், எமது உணவு பாதுகாப்பு செயன்முறைகளை மேம்படுத்தும் வகையில் அவர்கள் செயலாற்றுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறார்கள்” என்றார்.

“நிறுவனத்தின் மூலோபாய திட்டம் மற்றும் வழிகாட்டலின் பிரகாரம், இந்த ஆண்டில் நாம் நிலைபேறான இயந்திரங்கள் மற்றும் சாதனங்களில் பெருமளவு முதலீடுகளை மேற்கொண்டுள்ளோம். மேலும், நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து பண்ணை காணிகளை கொள்வனவு செய்துள்ளோம். இதனூடாக அதிகரித்துச் செல்லும் கேள்வியை நிவர்த்தி செய்யக்கூடியதாக இருக்குமென கருதுகிறோம். உணவு பாதுகாப்பு எனும் எமது உறுதியான கலாசாரத்தின் அடிப்படையில் நாம் தொடர்ச்சியாக இயங்கி வருவதுடன், எதிர்வரும் ஆண்டுகளில் இலங்கையின் முன்னணி இறைச்சி உற்பத்தியாளராக திகழ்வோம் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்” என்றார்.

நியு அந்தனீஸ் ஃபார்ம் தனது உற்பத்தி செயற்பாடுகளை சகல செயற்பாடுகளினூடாகவும் மேம்படுத்தியுள்ளது. இதன் புதிய சூழலுக்கு பாதுகாப்பான குஞ்சு பொரிக்கும் தொகுதியினூடாக உயரியல் பாதுகாப்பு மேம்படுத்தப்படும். வாரமொன்றில் நான்கு குஞ்சு பொரிக்கும் நாட்களுக்கு 260,000 – 280,000 ஒரு நாள் வயதுடைய கோழிக்குஞ்சுகளை பொரிக்கச் செய்யக்கூடிய திறனை கொண்டிருக்கும். புதிய தொகுதியில் 12 12 SmartSetPro கள் காணப்படும். இதில் ஒவ்வொன்றும் சுமார் 76ரூபவ்800 முட்டைகளை கொள்ளக்கூடிய திறனை கொண்டிருக்கும். அத்துடன் எட்டு SmartHatchPro பொரிப்பகங்கள் காணப்படும். இதில் ஒவ்வொன்றும் 19,200 முட்டைகளை கொள்ளும் திறனை கொண்டிருக்கும்.

இதில் பரிபூரண, நோக்கத்துக்காக வடிவமைக்கப்பட்ட Pas Reform இன் HVAS கட்டமைப்பு உள்ளடங்கியிருக்கும். இதனூடாக காற்று கையாளல் அலகுகள், அழுத்த கட்டுப்படுத்திகள், உறிஞ்சிகள் மற்றும் உள்விடுகை காற்றோட்டம் மற்றும் பரிபூரண காற்றோட்ட கட்டமைப்பு போன்றன பேணப்படும். மேலும் நவீன SmartCenterPro குஞ்சு பொரித்தல் முகாமைத்துவ மென்பொருள் உள்ளடங்கியிருக்கும்.

நியு அந்தனீஸ் ஃபார்ம்ஸ் தனது வணிக செயற்பாடுகளை 1986 இல் ஆரம்பித்திருந்தது. அன்று முதல், நிறுவனம் சேதன மற்றும் முன்னேற்றகரமான வளர்ச்சிய பதிவு செய்துள்ளது. தரமான, தூய்மையான இறைச்சிகளை சந்தையில் விநியோகித்து வருகிறது. நிறுவனத்தில் 650 க்கும் அதிகமான நேரடி ஊழியர்கள் பணியாற்றுவதுடன், 1000 க்கும் அதிகமானவர்கள் மறைமுகமாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் KFC, McDonalds, Perera and Sons, Cargills Quality Foods, Keells Food Products, Norfolk போன்ற பல நிறுவனங்களுக்கு சேவைகளை வழங்கி வருகின்றனர்.

இலங்கையின் பிரதான சுப்பர் மார்க்கட்களில் தனது தயாரிப்புகளை அறிமுகம் செய்யும் நடவடிக்கைகளை வேகமாக மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் அண்மையில் காகில்ஸ் ஃபுட் சிட்டி மற்றும் லாஃவ்ஸ் உடன் அண்மையில் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக...

2024-03-28 10:39:07
news-image

Samsung Sri Lanka ஆனது 35%...

2024-03-27 10:43:06
news-image

பருக்களுக்கு விடைகொடுத்திடும் : பியுரிஃபைங் நீம்...

2024-03-27 10:19:07
news-image

கார்கில்ஸ் நிறுவனமானது பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான...

2024-03-27 10:17:41
news-image

SampathCards உடன் இணைந்து  0% வட்டி...

2024-03-20 02:18:01
news-image

பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகங்கள் மத்தியில் மாற்றத்தை...

2024-03-20 02:13:22
news-image

2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க...

2024-03-20 02:05:24
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57